DC vs KKR: தொடரும் ஃபின்ச்சின் பிரச்னை.. ஸ்டம்ப்பை கழட்டி எறிந்த சகாரியா..!

By karthikeyan VFirst Published Apr 28, 2022, 7:52 PM IST
Highlights

ஸ்டம்ப்புக்கு நேராக வரும் பந்துகளுக்கு ஆரோன் ஃபின்ச் பலமுறை அவுட்டாகியிருக்கும் நிலையில், டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியிலும் ஸ்டம்ப்புக்கு நேராக இளம் பவுலர் சேத்தன் சகாரியா வீசிய பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார்.
 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் கேகேஆரும் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை  தேர்வு செய்தார்.

இந்த போட்டியில் டெல்லி அணி 2 மாற்றங்களுடனும், கேகேஆர் அணி 3 மாற்றங்களுடனும் களமிறங்கியுள்ளன.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட், ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா.

கேகேஆர் அணி:

ஆரோன் ஃபின்ச், சுனில் நரைன், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், உமேஷ் யாதவ், டிம் சௌதி, ஹர்ஷித் ராணா.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபின்ச்சும் வெங்கடேஷ் ஐயரும் இறங்கினர். ஆரோன் ஃபின்ச், முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீசிய முதல் ஓவரிலேயே ரன் அடிக்க முடியாமல் திணறினர். கஷ்டப்பட்டு 4வது பந்தில் ஒரு சிங்கிளை அடித்துவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று மறுமுனைக்கு சென்றார்.

பொதுவாக ஸ்டம்ப் லைனில் அல்லது ஸ்விங் ஆகி உள்ளே ஸ்டம்ப்புக்கு வரும் பந்துகளில் ஆரோன் ஃபின்ச் பலமுறை போல்டு/எல்பிடபிள்யூ ஆகி வெளியேறியிருக்கிறார். அவரது பலவீனம் அதுதான் என்பதை அறிந்து அதே லைனில் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் மற்றும் சேத்தன் சகாரியா ஆகிய 2 இடது கை ஃபாஸ்ட் பவுலர்களும் வீசினர். அதன் பலனாக சேத்தன் சகாரியா வீசிய இன்னிங்ஸின் 2வது ஓவரில் ஃபின்ச் 3 ரன்களில் போல்டாகி வெளியேறினார்.
 

click me!