DC vs KKR: டாஸ் ரிப்போர்ட்.. டெல்லி கேபிடள்ஸில் 2, கேகேஆரில் 3 மாற்றங்கள்..!

Published : Apr 28, 2022, 07:13 PM IST
DC vs KKR: டாஸ் ரிப்போர்ட்.. டெல்லி கேபிடள்ஸில் 2, கேகேஆரில் 3 மாற்றங்கள்..!

சுருக்கம்

கேகேஆருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆரும் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி. தோல்விகளால் துவண்டு போயிருக்கும் இரு அணிகளுமே வெற்றி வேட்கையில் இன்று களமிறங்கியுள்ளன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சர்ஃபராஸ் கான் மற்றும் கலீல் அகமது ஆகிய இருவரும் நீக்கப்பட்டு முறையே மிட்செல் மார்ஷ் மற்றும் சேத்தன் சகாரியா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட், ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா.

கேகேஆர் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சாம் பில்லிங்ஸ், ஷிவம் மாவி மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய மூவரும் நீக்கப்பட்டு ஆரோன் ஃபின்ச், பாபா இந்திரஜித் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். கேகேஆர் அணியில் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டிருந்தாலும், மற்றொரு தமிழக வீரரான பாபா இந்திரஜித் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேகேஆர் அணி:

ஆரோன் ஃபின்ச், சுனில் நரைன், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், உமேஷ் யாதவ், டிம் சௌதி, ஹர்ஷித் ராணா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!