வசமா சிக்கிய சஞ்சய் மஞ்சரேக்கர்.. வச்சு செஞ்ச சிஎஸ்கே.. தக்க தருணத்தில் மூக்கை உடைத்த தரமான சம்பவம்

By karthikeyan VFirst Published Mar 15, 2020, 12:14 PM IST
Highlights

பிசிசிஐ வர்ணனையாளர் குழுவிலிருந்து நீக்கப்பட்ட சஞ்சய் மஞ்சரேக்கரை, இந்த தருணத்துக்காகவே காத்திருந்ததுபோல சிஎஸ்கே அணி, தக்க பதிலடி கொடுத்தது.
 

இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர், சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். வர்ணனையின் போதும், சமூக வலைதளங்களிலும் அவர் பேசும் சர்ச்சை கருத்துகள், அவரை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றன.

அதிலும் குறிப்பாக கடந்த ஓராண்டாக அவரது கருத்துகள் கடும் சர்ச்சைகளை கிளப்பின. ஜடேஜாவை துண்டு துணுக்கு ஆல்ரவுண்டர் என்று மட்டம் தட்டினார் மஞ்சரேக்கர். அது கடும் விமர்சனத்துக்குள்ளானது. உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக ஜடேஜாவின் அபாரமான பேட்டிங்கை பார்த்துவிட்டு தனது கருத்தை வாபஸ் பெற்றதோடு, ஜடேஜாவை வெகுவாக பாராட்டினார். 

அதேபோல, வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி முதன்முதலில் ஆடிய பகலிரவு டெஸ்ட் போட்டியின்போது, இருட்டிய பின்னர் வங்கதேச வீரர்கள் பேட்டிங் ஆட திணறியதை கண்ட வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, லைட் வெளிச்சத்தில் பிங்க் பந்து பேட்ஸ்மேன்களின் கண்களுக்கு நன்றாக தெரிகிறதா என்று கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு சக வர்ணனையாளரான சஞ்சய் மஞ்சரேக்கர், நீங்கள் வேண்டுமானால் அதை கேட்கலாம். ஆனால் கிரிக்கெட் ஆடிய அனுபவம் கொண்ட என்னை போன்றவர்களுக்கு அந்த அவசியம் ஏற்படவில்லை. அங்கே என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியும் என்று ஹர்ஷா போக்ளேவை மட்டம் தட்டும் வகையில் பேசியிருந்தார். 

இப்படியாக தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற ரீதியிலும், தான் தான் பெரிய வீரர் என்கிற ரீதியிலும் பல முறை பலரை மட்டம் தட்டி பேசுவதுடன், மற்ற நாடுகளின் முன்னாள் வீரர்களுடனும் சமூக வலைதளங்களில் வாக்குவாதம் செய்திருக்கிறார். இவ்வாறு தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கிவந்த சஞ்சய் மஞ்சரேக்கரை வர்ணனையாளர் குழுவிலிருந்து பிசிசிஐ அதிரடியாக நீக்கியது. சஞ்சய் மஞ்சரேக்கரின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த பிசிசிஐ, அவரை வர்ணனையாளர் குழுவிலிருந்து நீக்கியது. 

ஐபிஎல்லில் வர்ணனை செய்யும்போது கூட, மும்பை இந்தியன்ஸுக்கு ஆதரவாகவே பேசுவார். வர்ணனையாளர்கள், பொதுவாக, அந்த குறிப்பிட்ட போட்டியை பற்றி வர்ணனை செய்ய வேண்டும். தங்களது கருத்தை தெரிவிக்கலாம். ஆனால் முழுக்க முழுக்க ஒருதலைபட்சமாக, ஒரு அணியின் ரசிகர் போன்று பேசக்கூடாது. ஆனால் சஞ்சய் மஞ்சரேக்கர், மும்பை இந்தியன்ஸுக்கு ஆதரவாகவே எப்போதும் பேசுவார். மற்ற அணிகளை மட்டம்தட்டியும் பேசுவார். 

எனவே மும்பை இந்தியன்ஸின் பரம எதிரியான சிஎஸ்கே அணி, அவர் மீது செம கடுப்பில் இருந்திருக்கும் போல.. அதேபோல சிஎஸ்கேவின் நட்சத்திர வீரரும், சிஎஸ்கே அணிகளின் தூண்களில் ஒருவருமான ஜடேஜாவை துண்டு துணுக்கு வீரர் என்று சஞ்சய்  மஞ்சரேக்கர் விமர்சித்ததையும் சிஎஸ்கே மறக்கவில்லை. அதற்கு பதிலடி கொடுப்பதற்கான தக்க தருணத்துக்காக காத்திருந்திருக்கிறது. 

Also Read - கண்டதையும் திண்ணுட்டு இப்படி நோயை பரப்புறீங்களேடா.. சீனா மீது செம கடுப்பாகி சீனர்களை கழுவி ஊற்றிய அக்தர்

இந்நிலையில், சஞ்சய் மஞ்சரேக்கரை பிசிசிஐ, வர்ணனையாளர் குழுவிலிருந்து நீக்கிய நிலையில், மஞ்சரேக்கரை டுவிட்டரில் செமயாக கலாய்த்துள்ளது சிஎஸ்கே. இனிமேல் இந்த துண்டு துணுக்கோட மொக்கையான கமெண்ட்ரி ஆடியோவை கேட்க வேண்டிய தேவையிருக்காது என்று டுவீட் செய்து மஞ்சரேக்கரை கிண்டலடித்துள்ளது சிஎஸ்கே அணி. 

Need not hear the audio feed in bits and pieces anymore. 🦁💛

— Chennai Super Kings (@ChennaiIPL)
click me!