ISPL T10, CS vs TOK: ஐஎஸ்பிஎல் 2024 லீக் தொடரில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் த்ரில் வெற்றி!

By Rsiva kumarFirst Published Mar 8, 2024, 9:21 AM IST
Highlights

இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம் அணியானது 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் கடந்த 6ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், அணியின் உரிமையாளர்களான சூர்யா, அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், ராம் சரண் மற்றும் சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் கான் ஆகியோர் கலந்து கொண்டு முதல் சீசனை தொடங்கி வைத்தனர். தொடக்க விழாவில் சச்சின் டெண்டுல்கர், அக்‌ஷய் குமார், ராம் சரண் மற்றும் சூர்யா ஆகியோர் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வைரலானது.

இந்த சீசனின் முதல் போட்டியில் அமிதாப் பச்சனின் மஜ்ஹி மும்பை அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று நடந்த 2ஆவது போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம் அணியும், சயீப் அலி கான் மற்றும் கரீனா கபூர் கான் ஆகியோரது டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா அணியும் மோதின.

இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை சிங்கம் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக சாகர் அலி 34 ரன்கள் எடுத்தார். பப்லு பாட்டீல் 23 ரன்களும் எடுத்தனர்.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா அணியில் பாவேஷ் பவர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பப்பு ராணா, ஷிவம் கம்போஜ் மற்றும் ராஜூ முகியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து, 121 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது.

இதில், கேப்டன் பிரதாமேஷ் பவர் 22 பந்துகளில் 6 சிக்ஸர்கள் உள்பட 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஃபர்தீன் காஸி 21 ரன்களும், ஜாண்டி சர்கார் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா 10 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் சென்னை சிங்கம்ஸ் அணியில் தவித் குமார் 2 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். விஸ்வநாத் ஜதேவ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

click me!