அடுத்த போட்டியில் அவங்க 2 பேரும் ஆடுவாங்க.. 3வது டி20 முடிந்ததுமே அதிரடியாக அறிவித்த கேப்டன் கோலி

By karthikeyan VFirst Published Jan 30, 2020, 12:43 PM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி 2 டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் மாற்றங்கள் குறித்து 3வது போட்டி முடிந்ததுமே அதிரடியாக அறிவித்தார் கேப்டன் கோலி. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 3-0 என டி20 தொடரை வென்றது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, ஹாமில்டனில் நேற்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. 

3 போட்டிகளை தொடர்ச்சியாக வென்று டி20 தொடரை இந்திய அணி வென்றுவிட்ட நிலையில், கடைசி 2 போட்டிகளில் முதல் 3 போட்டிகளில் ஆடாத சில வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது. அதை கேப்டன் கோலியே உறுதி செய்துள்ளார். 

முதல் 3 போட்டிகளிலும் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரே அணி தான் 3 போட்டிகளிலும் ஆடியது. அந்த அணி சிறப்பாக செயல்பட்டதால், எந்த மாற்றமும் செய்வதற்கான அவசியம் ஏற்படவில்லை எனவே அதே அணியுடன் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி ஆடியது. 

Also Read - அது மட்டும் நடக்காம இருந்திருந்தா சூப்பர் ஓவரில் நான் பேட்டிங் ஆடியிருக்கமாட்டேன்.. அவருதான் ஆடியிருப்பாரு - ரோஹித் சர்மா

சஞ்சு சாம்சன், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர் ஆகிய சிறந்த வீரர்கள் சிலர், இந்த தொடரில் முதல் 3 போட்டிகளில் ஒரு வாய்ப்பு கூட கொடுக்கப்படாமல் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டிருக்கின்றனர். எனவே தொடரை இந்திய அணி வென்றுவிட்டதால், ஆடாத வீரர்களுக்கு கடைசி 2 போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படும் என்பது தெரிந்ததுதான். 

அதை கேப்டன் கோலியும் உறுதி செய்துள்ளார். மூன்றாவது டி20 போட்டியில் வென்ற பிறகு பேசிய கேப்டன் கோலி, ஆடும் லெவனில் இடம்பெற்று ஆட தகுதியான சைனி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் கடந்த சில போட்டிகளில் வாய்ப்பு பெறவில்லை. எனவே அவர்கள் இருவருக்கும் அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படும். அடுத்த 2 போட்டிகளிலும் வென்று 5-0 என தொடரை வெல்வதுதான் எங்கள் நோக்கம் என்று கேப்டன் கோலி தெரிவித்தார். 

கோலியின் கூற்றுப்படி பார்த்தால், சாஹல் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு முறையே சுந்தர் மற்றும் சைனி ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்படுவார்கள். ஆனால் இப்போது கூட சஞ்சு சாம்சனை பற்றி கோலி வாய் திறக்கவேயில்லை.

click me!