டெஸ்ட் தொடரில் கேமரூன் இடம் பெறுவார்: ஆண்ட்ரூ மெக் டொனால்டு திட்டவட்டம்!

By Rsiva kumarFirst Published Jan 31, 2023, 6:46 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் கேமரூன் க்ரீன் இடம் பெறுவார் என்று பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்டு கூறியுள்ளார்.
 

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத், இஷான் கிஷான், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கடைசி நேரத்தில் நடந்த தவறு - லக்னோ பிட்ச்சை உருவாக்கும் அதிகாரி நீக்கம்!

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது கேமரூன் க்ரீனுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ஓய்வில் இருந்து வருகிறார். இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணியில் கேமரூன் க்ரீன் இடம் பெற்றிருந்தார். அவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர். மிர்டர் ஆர்டரில் நன்றாக ஆடக் கூடியவர். மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார். ஆனால், 2ஆவது டெஸ்டில் அவர் களமிறங்குவார் என்று ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்டு தெரிவித்துள்ளார்.

நீயா? நானா? சவாலில் இந்தியா - நியூசிலாந்து: பிட்ச் யாருக்கு சாதகம்?

கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியிருந்தது. ஆனால், அதன் பிறகு டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய யூத் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி: இந்தியாவையே பெருமைப்படுத்திய செஸ் சாம்பியன் யுஸ்வேந்திர சகால்!

click me!