ஃபார்முக்கு திரும்பி பட்டைய கிளப்பிய பட்லர்.. ரூட் அரைசதம்.. ஆஷஸ் அப்டேட்

By karthikeyan VFirst Published Sep 13, 2019, 10:15 AM IST
Highlights

இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜேசன் ராய் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி, கடைசி ஆஷஸ் போட்டியில் அதிரடியாக ஆடிவருகிறார். அவரது அதிரடி அரைசதம் இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளது. 

ஆஷஸ் தொடரின் 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலை வகிக்கும் நிலையில், கடைசி போட்டி நேற்று தொடங்கி நடந்துவருகிறது. 

இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கியுள்ள இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன், இங்கிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

இந்த போட்டியில் ஜேசன் ராய் நீக்கப்பட்டதால், டென்லியும் பர்ன்ஸூம் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் இணைந்து நிதானமாக தொடங்கினர். எனினும் டென்லி நிலைக்கவில்லை. டென்லியை 14 ரன்களில் பாட் கம்மின்ஸ் வீழ்த்தினார். அதன்பின்னர் பர்ன்ஸுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட், பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தார். 

ரூட்-பர்ன்ஸ் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தது. 47 ரன்கள் அடித்த பர்ன்ஸ், ஹேசில்வுட்டின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரூட்டுடன் ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், 20 ரன்களில் மிட்செல் மார்ஷின் பந்தில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ரூட்டை 57 ரன்களில் கம்மின்ஸ் வீழ்த்தினார். வழக்கமாக ஹேசில்வுட்டும் கம்மின்ஸும் மட்டுமே அபாரமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி கொண்டிருந்த நிலையில், இந்த போட்டியில் மிட்செல் மார்ஷ் அசத்தினார். 

பென் ஸ்டோக்ஸை வீழ்த்திய மிட்செல் மார்ஷ், அதன்பின்னர் பேர்ஸ்டோ, வோக்ஸ், சாம் கரன் ஆகியோரை சொற்ப ரன்களில் வெளியேற்றினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் ஜோஸ் பட்லர் நிலைத்து நின்றதோடு, அதிரடியாக ஆடி ஸ்கோரையும் உயர்த்தினார். அரைசதம் அடித்த பட்லர், முதல் நாள் ஆட்ட முடிவில், 84 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 64 ரன்களை குவித்து களத்தில் உள்ளார். அவருடன் ஜாக் லீச் களத்தில் உள்ளார். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 271 ரன்களை அடித்துள்ளது.

பேட்டிங்கிற்கு சாதகமான ஓவல் ஆடுகளத்திற்கு இந்த ஸ்கோர் பெரிய விஷயமல்ல. எனவே ஆஸ்திரேலிய அணி பெரிய ஸ்கோரை அடிக்க வாய்ப்புள்ளது.
 

click me!