அட அவரை ஏன்ப்பா டீம்ல எடுக்கல..? கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஆல்ரவுண்டரின் புறக்கணிப்பு

By karthikeyan VFirst Published Sep 12, 2019, 5:33 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், டெஸ்ட் தொடருக்கான அணி இன்று அறிவிக்கப்பட்டது. 
 

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

வரும் 15ம் தேதி இந்த தொடர் தொடங்கவுள்ளது. முதலில் டி20 தொடரும் அதைத்தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன. டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், டெஸ்ட் தொடருக்கான அணி இன்று அறிவிக்கப்பட்டது. 

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக சொதப்பிவந்த தொடக்க வீரர் கேஎல் ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷுப்மன் கில் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா தொடக்க வீரராக இறங்கவுள்ளார். உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, தென்னாப்பிரிக்க தொடரில் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தொடரிலும் பாண்டியா புறக்கணிக்கப்பட்டுள்ளார். 3 ஃபாஸ்ட் பவுலர்கள், ஒரு ஸ்பின் ஆல்ரவுண்டர், 7 பேட்ஸ்மேன்கள் என்ற காம்பினேஷனில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் ஆடியது. ஆனால் இந்திய கண்டிஷனில் 2 ஃபாஸ்ட் பவுலர்கள், 2 ஸ்பின்னர்கள், 7 பேட்ஸ்மேன்கள் என்ற காம்பினேஷனில் இறங்கும். எனவே ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் தேவையில்லை என்பதால் பாண்டியா எடுக்கப்படவில்லை. 

இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராகவும் திகழும் பாண்டியாவின் புறக்கணிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

click me!