ஆஷஸ் கடைசி டெஸ்ட்.. 2 அணியிலும் 2 அதிரடி மாற்றங்கள்.. இங்கிலாந்து முதலில் பேட்டிங்

By karthikeyan VFirst Published Sep 12, 2019, 3:38 PM IST
Highlights

கடைசி போட்டியிலும் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை 3-1 என வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், இந்த போட்டியில் வென்று தொடரை 2-2 என சமன்செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் உள்ளன. இந்நிலையில், ஓவலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன், இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 
 

ஆஷஸ் தொடரில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஓவலில் தொடங்கியது. 

கடைசி போட்டி டிராவில் முடிந்தால்கூட, ஆஸ்திரேலிய அணிக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அந்த அணி ஏற்கனவே 2-1 என தொடரில் முன்னிலை வகிப்பதால், கடைசி போட்டி டிரா ஆனாலும் ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுவிடும். ஆனால் இங்கிலாந்து அணி தொடரை இழக்காமல் இருக்க வேண்டுமானால், கடைசி போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

அதேநேரத்தில் கடைசி போட்டியிலும் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை 3-1 என வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இந்நிலையில், ஓவலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன், இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

இரு அணிகளிலுமே தலா 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உலக கோப்பையில் அபாரமாக ஆடியதால் முதன்முறையாக டெஸ்ட் அணியில் இடம்பெற்ற இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய், 8 இன்னிங்ஸ்களில் வெறும் 110 ரன்களே அடித்து ஏமாற்றினார். எனவே அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் சாம் கரனும் ஓவர்டனுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

அதேபோல ஆஸ்திரேலிய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் நீக்கப்பட்டு மிட்செல் மார்ஷும் ஸ்டார்க்கிற்கு பதிலாக பீட்டர் சிடிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இங்கிலாந்து அணி:

பர்ன்ஸ், டென்லி, ஜோ ரூட்(கேப்டன்), ஸ்டோக்ஸ்(துணை கேப்டன்), பட்லர், பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர், பிராட், ஜாக் லீச். 

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், லபுஷேன், ஸ்மித், மிட்செல் மார்ஷ், டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், பீட்டர் சிடில், நாதன் லயன், ஹேசில்வுட். 
 

click me!