உன்னைய இனிமேலும் நம்புறது வேஸ்ட்.. இங்கிலாந்து அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. இந்திய அணியை தெறிக்கவிட்ட வீரருக்கு வாய்ப்பு

By karthikeyan VFirst Published Sep 12, 2019, 2:33 PM IST
Highlights

ஆஷஸ் தொடரின் கடைசி போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 2 அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

ஆஷஸ் தொடரில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஓவலில் தொடங்குகிறது. 

கடைசி போட்டி டிராவில் முடிந்தால்கூட, ஆஸ்திரேலிய அணிக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அந்த அணி ஏற்கனவே 2-1 என தொடரில் முன்னிலை வகிப்பதால், கடைசி போட்டி டிரா ஆனாலும் ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுவிடும். ஆனால் இங்கிலாந்து அணி தொடரை இழக்காமல் இருக்க வேண்டுமானால், கடைசி போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

எனவே கடைசி போட்டி இங்கிலாந்து அணிக்கு மிக முக்கியமான போட்டி. கடைசி போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டுமென்பதால், அணியில் 2 அதிரடியான மாற்றங்களை செய்துள்ளது. உலக கோப்பையில் அபாரமாக ஆடியதன் விளைவாக ஆஷஸ் தொடரில் முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால் ராய் மீது அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றவில்லை. 

4 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், அந்த 4 போட்டியிலும் அவர் ஆடிய 8 இன்னிங்ஸ்களில் ஒன்றில் கூட சரியாக ஆடவில்லை. 8 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே வெறும் 110 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோரே 31 தான். அவர் மீது நம்பிக்கை வைத்து 4 போட்டிகளில் ஆடவைக்கப்பட்டார். ஆனால் ஒரு இன்னிங்ஸில் கூட சரியாக ஆடாததால் இனியும் இவரை நம்பி பிரயோஜனம் இல்லை என்பதால், கடைசி போட்டியில் அவர் அதிரடியாக நீக்கப்பட்டு, ஆல்ரவுண்டர் சாம் கரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக ஆடி இங்கிலாந்து அணி தொடரை வெல்ல காரணமாக திகழ்ந்தார் சாம் கரன். இந்நிலையில், ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்ட்டில் இன்று களமிறங்குகிறார் சாம் கரன். 

அதேபோல கடந்த போட்டியில் ஆடிய ஃபாஸ்ட் பவுலர் ஓவர்டன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

கடைசி ஆஷஸ் போட்டிக்கான இங்கிலாந்து அணி:

பர்ன்ஸ், டென்லி, ஜோ ரூட்(கேப்டன்), ஸ்டோக்ஸ்(துணை கேப்டன்), பட்லர், பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர், பிராட், ஜாக் லீச். 
 

click me!