BBL: பரபரப்பான போட்டியில் மெல்பர்ன் ஸ்டார்ஸை கடைசி பந்தில் வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் த்ரில் வெற்றி

By karthikeyan VFirst Published Jan 22, 2023, 3:21 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் மெல்பர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி த்ரில் வெற்றி பெற்றது.
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று பிரிஸ்பேனில் நடந்த போட்டியில் மெல்பர்ன் ஸ்டார்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பிரிஸ்பேன் ஹீட் அணி:

உஸ்மான் கவாஜா (கேப்டன்), ஜோச் பிரௌன், மார்னஸ் லபுஷேன், மேட் ரென்ஷா, சாம் ஹைன், ஜிம்மி பியர்சன் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் நெசெர், ஜேம்ஸ் பேஸ்லி, ஸ்பென்சர் ஜான்சன், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ குன்னெமேன்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்படும் பாபர் அசாம்..! உறுதிசெய்த அஃப்ரிடி

மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி:

ஜோ கிளார்க் (விக்கெட் கீப்பர்), தாமஸ் ரோஜர்ஸ், கேம்ப்பெல் கெல்லாவே, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹில்டான் கார்ட்ரைட், பியூ வெப்ஸ்டெர், நிக் லார்கின், நேதன் குல்ட்டர்நைல், லுக் உட், லியாம் ஹாட்ச்சர், ஆடம் ஸாம்பா (கேப்டன்).

முதலில் பேட்டிங் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் டாப் 4 வீரர்கள் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் சாம் ஹைனும், பியர்சனும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய சாம் ஹைன் 41 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்தார். 43 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 57 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 188 ரன்களை குவித்தது பிரிஸ்பேன் ஹீட் அணி.

189 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோ கிளார்க் 32 பந்தில் 31 ரன் மட்டுமே அடித்தார். கிளார்க் 32 பந்தில் 31 ரன் மட்டுமே அடித்ததால் எஞ்சிய 88 பந்தில் 158 ரன்கள் அடிக்க வேண்டிய சூழல் உருவானது. ஜோ கிளார்க் மந்தமாக பேட்டிங் ஆடினாலும்,, மற்றொரு தொடக்க வீரரான தாமஸ் ரோஜர்ஸ் 20 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 41 ரன்களை விளாசி, கிளார்க் ஆடிய மந்தமான பேட்டிங்கை ஈடுகட்டினார். 3ம் வரிசையில் இறங்கிய கெல்லாவே 25 ரன்கள் அடித்தார்.

ஃபிட்டா, ட்ரிம்மா இருந்தால் தான் இந்திய அணியில் இடமா..? ஃபேஷன் ஷோவுக்கா ஆள் எடுக்குறீங்க..? கவாஸ்கர் அதகளம்

அதன்பின்னர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் கார்ட்ரைட் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி இலக்கை நோக்கி மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியை அழைத்து சென்றனர். ஸ்டோய்னிஸ் 23 பந்தில் 36 ரன்களும், கார்ட்ரைட் 24 பந்தில் 33 ரன்களும் அடித்தனர். ஆனாலும் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. கடைசி ஓவரில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு 14 ரன்கள் தேவைப்பட, கடைசி ஓவரை வீசிய ஸ்பென்சர் ஜான்சன், 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க, 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
 

click me!