டி20 உலக கோப்பையில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன்..! முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு

By karthikeyan VFirst Published Oct 21, 2021, 2:51 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவனை முன்னாள் வீரர் பிராட் ஹேடின் தேர்வு செய்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடந்துவருகிறது. கடந்த 17ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் 22ம் தேதி வரை தகுதிச்சுற்று போட்டிகள் நடக்கின்றன. 23ம் தேதி முதல் சூப்பர் 12 போட்டிகள் தொடங்குகின்றன.

இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 அணிகளும் டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. அமீரக கண்டிஷனை நன்கு அறிந்த பாகிஸ்தான் அணியும் வலுவான அணியாக திகழ்வதால் அந்த அணியும் கடும் சவாலளிக்கும்.

ஆனால் டி20 கிரிக்கெட்டில் தடுமாறிவரும் ஆஸ்திரேலிய அணி, இந்த உலக கோப்பையை வெல்லும் அணியாக மதிப்பிடப்படவில்லை. பொதுவாகவே அந்த அணி டி20 கிரிக்கெட்டில் பெரிதாக ஜொலிக்காத நிலையில், அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் மோசமான ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

ஆனால் மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்மித் ஆகிய வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஆனாலும் வார்னரின் ஃபார்ம் ஆஸ்திரேலிய அணிக்கு மிக முக்கியம்.

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 152 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு 153 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த இலக்கை 18வது ஓவரிலேயே அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுவிட்டது.

அது பயிற்சி போட்டியாகவே இருந்தாலும், அந்த படுதோல்வி ஆஸ்திரேலிய அணிக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கும். அந்த தவறுகளையெல்லாம் கலைந்து டி20 உலக கோப்பையில் சிறப்பாக ஆடும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

இதையும் படிங்க - பாகிஸ்தானுக்கு எதிராக இந்த 11 பேரை இறக்குங்க..! இர்ஃபான் பதானின் இந்திய அணி தேர்வு

எந்தவொரு அணியும் சிறப்பாக ஆட, அதன் ஆடும் லெவன் காம்பினேஷன் மிக முக்கியம். அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் பிராட் ஹேடின்.

பிராட் ஹேடின் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன்:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஷ்டான் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.
 

click me!