டி20 உலக கோப்பையிலிருந்து காயத்தால் விலகிய ஆல்ரவுண்டர்..! வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மரண அடி

By karthikeyan VFirst Published Oct 20, 2021, 10:18 PM IST
Highlights

கணுக்கால் காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரிலிந்து விலகியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஃபேபியன் ஆலன்.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் கடந்த 17ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகளும் பயிற்சி போட்டிகளும் நடந்துவருகின்றன. வரும் 23ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன.

இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படும் அணிகளில் ஒன்று வெஸ்ட் இண்டீஸ். எப்போதுமே டி20 கிரிக்கெட்டில் அபாயகரமான அணி வெஸ்ட் இண்டீஸ். 2016ல் டி20 உலக கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் அணியான வெஸ்ட் இண்டீஸ், பொல்லார்டு தலைமையில் கெய்ல், எவின் லூயிஸ், ஆண்ட்ரே ரசல் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் மற்றும் பூரன், ஹெட்மயர் உள்ளிட்ட இளம் வீரர்கள் என அனுபவமும் இளமையும் கலந்த அணியாக திகழ்கிறது வெஸ்ட் இண்டீஸ்.

நல்ல பேலன்ஸான, வலுவான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படும் நிலையில், கணுக்கால் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸின் ஸ்பின் ஆல்ரவுண்டரான ஃபேபியன் ஆலன் இந்த உலக கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இடது கை ஸ்பின் ஆல்ரவுண்டரான ஃபேபியன் ஆலனின் டி20 பவுலிங் சராசரி 27.05 மற்றும் எகானமி 7.21. பேட்டிங்கில் அவரது ஸ்டிரைக் ரேட் 138. ஃபேபியன் ஆலன் நன்றாக பந்துவீசுவது மட்டுமல்லாமல், அணிக்கு பயனுள்ள ரன்களை வேகமாக அடித்து கொடுக்கக்கூடிய பேட்ஸ்மேனும் கூட.

எனவே அவரது இழப்பு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரிய இழப்பு. அவருக்கு மாற்று வீரராக அவரைப்போலவே பந்துவீசக்கூடிய இடது கை ஸ்பின் ஆல்ரவுண்டரான அகீல் ஹுசைன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 

click me!