யாரையும் நம்ப விரும்பல.. நானே பார்த்துக்குறேன்..! ஆஸி.,க்கு எதிராக வரிந்துகட்டிக்கொண்டு இறங்கிய கோலி

By karthikeyan VFirst Published Oct 20, 2021, 9:48 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் விராட் கோலி 2 ஓவர்கள் பந்துவீசினார். அந்த போட்டியில் வெறும் பவுலராக மட்டுமே ஆடினார் கோலி.
 

டி20 உலக கோப்பையில் வரும் 24ம் தேதி இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. விராட் கோலி தலைமையில் முதல் ஐசிசி டிராபியை தூக்கும் முனைப்பில் உள்ள இந்திய அணி, அனுபவமும் இளமையும் கலந்த வலுவான அணியாக உள்ளது.

அதிரடி பேட்ஸ்மேன்கள், மாயாஜால ஸ்பின்னர் உட்பட தரமான ஸ்பின்னர்கள், உலகத்தரம் வாய்ந்த ஃபாஸ்ட் பவுலர்கள் என்ற நல்ல பேலன்ஸான அணியாக இந்திய அணி திகழ்கிறது.

ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா என பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன் இந்திய அணி ஆடவுள்ளது. ஷமி, பும்ரா, ஜடேஜா, ஷர்துல் தாகூர் மற்றும் அஷ்வின்/வருண் சக்கரவர்த்தி/ராகுல்  சாஹர் ஆகிய 5 பவுலர்களுடன் ஆடவுள்ளது.

ஹர்திக் பாண்டியா பந்துவீசுவதற்கு தகுந்த ஃபிட்னெஸுடன் இல்லாததால், அவர் பந்துவீசமாட்டார் என்று தெரிகிறது. அவர் பந்துவீசாதது இந்திய அணியின் பேலன்ஸை சற்று சிதைக்கிறது. ஏனெனில் அவர் பந்துவீசினால், அவர் 6வது பவுலிங் ஆப்சனாக இருப்பார். ஹர்திக் பாண்டியா பந்துவீசாததால் 6வது பவுலிங் ஆப்சனை உருவாக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியின் டாஸின்போது, இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, நான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரில் ஒருவர் 6வது பவுலிங் ஆப்சனாக தயாராக வருகிறோம் என்றார்.

இதையும் படிங்க - ரஷீத் கானை கவர்ந்த இந்திய இளம் ஸ்பின்னர் இவர் தான்..! தம்பி பட்டைய கிளப்புறான் என புகழாரம்

ரோஹித் இவ்வாறு கூறிய நிலையில், ஆஸி., அணியின் பேட்டிங்கின்போது விராட் கோலி 2 ஓவர்கள் வீசினார். 2 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை என்றாலும், 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். எனவே 5 மெயின் பவுலர்களில் ஒருவர் அதிக ரன்கள் கொடுக்கும்பட்சத்தில், இடையில் 2-3 ஓவர்களை ஓட்டிவிட ஒரு பவுலிங் ஆப்சன் தேவை. அதற்கு வேறு யாரையும் எதிர்பார்க்காமல் தானே களத்தில் இறங்கிவிட்டார் கோலி.

ரோஹித் சர்மாவும் நல்ல பவுலர் தான். ஐபிஎல்லில் ரோஹித் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!