ஐபிஎல் கண்டிப்பா நடத்தப்படும்; கவலைப்படாதீங்க..! கங்குலி அதிரடி

By karthikeyan VFirst Published Jun 11, 2020, 2:29 PM IST
Highlights

ஐபிஎல் இந்த ஆண்டு கண்டிப்பாக நடத்தப்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலி நம்பிக்கை தெரிவித்திருப்பது, கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. 
 

கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 

ஐபிஎல்லை நடத்துவதில் பிசிசிஐ தீர்மானமாக உள்ளது. ஆனால் எப்போது, எப்படி என்பது மட்டும்தான் இன்னும் உறுதியாகவில்லை. இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல்லில் ஆட மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஐபிஎல்லை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ரசிகர்களும் ஐபிஎல் குறித்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 

அக்டோபர் 18ல் ஆஸ்திரேலியாவில் தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அக்டோபர் - நவம்பர் காலக்கட்டத்தில் ஐபிஎல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் இந்தியாவில் இன்னும் கொரோனா கட்டுக்குள் வராததால், ஐபிஎல் எப்போது நடத்தப்படும் என்ற திடமான முடிவை பிசிசிஐ-யால் எடுக்க முடியவில்லை. அதுமட்டுமல்லாமல், போட்டிகளை காண ரசிகர்களை அனுமதிப்பது, இப்போதைய சூழலில் சாத்தியமல்ல. இந்நிலையில், ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த நேர்ந்தாலும் பரவாயில்லை; ஆனால் இந்த ஆண்டே ஐபிஎல்லை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி எழுதியுள்ள கடிதத்தில், ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த நேர்ந்தாலும் பரவாயில்லை. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல்லை நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் பிசிசிஐ எடுத்துவருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாது, ஐபிஎல் அணிகள், வெளிநாட்டு வீரர்கள், ஓளிபரப்பாளர்கள், பங்குதாரர்கள், ஸ்பான்ஸர்கள் என அனைத்து தரப்பினரும் ஐபிஎல்லை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

இந்தியா வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல் நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். எனவே ஐபிஎல் 13வது சீசனை நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று கங்குலி தெரிவித்துள்ளார். 

கங்குலியின் இந்த கருத்து, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களை உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைய செய்துள்ளது. 
 

click me!