இந்திய டி20 அணியில் சீனியர் வீரர்களுக்கு இனி இடம் இல்லை..! பிசிசிஐ அதிரடி

By karthikeyan V  |  First Published Nov 29, 2022, 5:54 PM IST

இந்திய டி20 அணியில் இனி சீனியர் வீரர்களுக்கு இடம் இல்லை என்பதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.
 


டி20 உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறியது. அரையிறுதியில் இந்திய அணி நிர்ணயித்த 169 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறி கோப்பையையும் ஜெயித்தது.

இந்திய அணி தோற்றது கூட பரவாயில்லை. ஆனால் தோற்ற விதம் படுமோசமானது. இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வி அடைந்தது. டி20 உலக கோப்பையில் இந்திய அணி பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்யாதது, மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் விக்கெட் வீழ்த்தாதது ஆகிய இரண்டும் தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தன.

Tap to resize

Latest Videos

NZ vs IND: 3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! உத்தேச ஆடும் லெவன்

டி20 உலக கோப்பையில் பவர்ப்ளேயில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோரே 46 ரன்கள். அதுவும் நெதர்லாந்துக்கு எதிராக அடித்தது. அந்தளவிற்கு பவர்ப்ளேயில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்திருக்கிறது. இந்திய அணி தோற்றுப்போனதற்கு பவர்ப்ளேயில் அதிரடியான தொடக்கம் அமையாததும் அதனால் போதுமான ஸ்கோரை அடிக்க முடியாததும் தான் காரணம். அரையிறுதியில் தோற்று வெளியேறியதற்கும் அதுவே காரணம். 

ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய 2 பெரிய ஐசிசி தொடர்களிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது, இந்திய அணியின் அணுகுமுறையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிரித்வி ஷா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இளம் அதிரடி வீரர்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில், சீனியர் வீரர்களை ஓரங்கட்டிவிட்டு, அதிரடி வீரர்களை அணியில் எடுத்து, ஆக்ரோஷமான அணுகுமுறையை கையாளவேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன.

எனவே சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய சீனியர் வீரர்களின் டி20 கெரியர் முடிந்துவிட்டது என்று பேசப்பட்டது. இதுகுறித்து டி20 உலக கோப்பைக்கு பின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதுகுறித்து கருத்து கூற இது சரியான நேரம் கிடையாது என்று பதிலளித்தார்.

கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிக்கிறார்.. உடனே அவரை அணியிலிருந்து நீக்குங்க..! கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அதிரடி

இந்நிலையில், இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், சீனியர் வீரர்கள் யாரையும் ஓய்வு அறிவிக்குமாறு பிசிசிஐ கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் 2023ம் ஆண்டு நடக்கும் டி20 போட்டிகளில் சீனியர் வீரர்கள் ஆடமாட்டார்கள். அவர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்துவார்கள். ஓய்வு அறிவிப்பது அவர்களின் முடிவு என்று அந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
 

click me!