டி20 உலக கோப்பையை எங்கு நடத்துவது? திடமான முடிவை ஐசிசி-யிடம் சொல்லிட்டோம் - கங்குலி அதிரடி

By karthikeyan VFirst Published Jun 28, 2021, 6:26 PM IST
Highlights

டி20 உலக கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று ஐசிசியிடம் தெரிவித்துவிட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி, தற்போது குறைந்துவிட்டது. கொரோனா அச்சுறுத்தலால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளை செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துகிறது பிசிசிஐ.

அக்டோபர் 18ம் தேதி டி20 உலக கோப்பை இந்தியாவில் தொடங்குவதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டி20 உலக கோப்பை இந்தியாவில் நடத்த முடியாத சூழல் உள்ளது. கொரோனா 2ம் அலை கட்டுக்குள் வந்துவிட்டாலும் கூட, முன்னெச்சரிக்கை கருதி டி20 உலக கோப்பையை இந்தியாவில் நடத்தாமல் இருப்பது நல்லது.

இந்தியாவில் கொரோனா குறைந்துவந்த நிலையில், டி20 உலக கோப்பையை இந்தியாவில் நடத்துவது குறித்து முடிவெடுக்க ஜூன் கடைசி வாரம் வரை அவகாசம் கோரியது பிசிசிஐ. இந்நிலையில், டி20 உலக கோப்பையைன் அமீரகத்திலேயே நடத்தலாம் என்று ஐசிசியிடம் பிசிசிஐ தெரிவித்துவிட்டதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
 

click me!