இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கம், சர்ஃபராஸ், ஜூரெலுக்கு வாய்ப்பு - வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு!

Published : Feb 28, 2024, 06:55 PM ISTUpdated : Feb 28, 2024, 07:12 PM IST
இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கம், சர்ஃபராஸ், ஜூரெலுக்கு  வாய்ப்பு -  வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு!

சுருக்கம்

நடப்பு ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்ட நிலையில் இஷான் கிஷான் மற்றும் ஷ்ரெயாஸ் ஐயர் இருவரையும் பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது.

ஆண்டுதோறும் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான (2023-2024) இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்ததத்தை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. பிசிசிஐ வெளியிட்ட இந்த ஒப்பந்த பட்டியலில் இளம் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். சில வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அதில், இஷான் கிஷான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இடம் பெற்றுள்ளனர்.

சச்சினின் ஜம்மு – காஷ்மீர் பயணம் இளைஞர்களுக்கு 2 முக்கியமான கருத்துக்களை எடுத்துரைக்கிறது – பிரதமர் மோடி!

கிரேடு ஏ + (4 வீரர்கள்) (ரூ.7 கோடி)

ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா.

கிரேடு ஏ (6 வீரர்கள்) (ரூ.5 கோடி)

ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், கேஎல் ராகுல், சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா.

கிரேடு பி (5 வீரர்கள்) (ரூ.3 கோடி)

சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்,

கிரேடு சி (15 வீரர்கள்) (ரூ.1 கோடி)

ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்வாட், ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபேர், ரவி பிஷ்னாய், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கேஎஸ் பரத், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், ரஜத் படிதார்.

ஜம்மு-காஷ்மீர் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர்!

இந்த கால ஆண்டிற்குள்ளாக வீரர்கள் குறைந்தது 3 டெஸ்ட், 8 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி போட்டிகளில் விளையாடும் வீரர்கள் விகித அடிப்படையில் கிரேடு சி பிரிவில் சேர்க்கப்படுவார்கள். ஆனால், இங்கிலாந்துக்கு எதிராக 3ஆவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரெல் 2 டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ளனர். அவர்கள் வரும் மார்ச் 7ஆம் தேதி தரம்சாலாவில் நடக்க இருக்கும் 5ஆவது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று விளையாடினால், இருவரும் கிரேடு சியில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோகித் சர்மாவை ஓவர்டேக் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் – டெஸ்ட் ரேங்கில் பட்டியலில் 12ஆவது இடம்!

இதில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் இருவரும் இந்த வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இடம் பெறவில்லை. தேர்வுக்குழுவானது ஆகாஷ் தீப், விஜயகுமார் வைஷாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள் மற்றும் வித்வத் காவேரப்பா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களின் ஒப்பந்தங்களையும் பரிந்துரை செய்துள்ளது.

இந்திய அணியில் இடம் பெற்று விளையாடாத விளையாட்டு வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சினின் ஜம்மு – காஷ்மீர் பயணம் இளைஞர்களுக்கு 2 முக்கியமான கருத்துக்களை எடுத்துரைக்கிறது – பிரதமர் மோடி!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!