
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தற்போது அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ளது. உலகக் கோப்பையின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடு வருகின்றன. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்கள் குவித்தார். ஜோஸ் பட்லர் 43 ரன்கள் எடுத்தார்.
Asian Games 2023: ஆப்பிரிக்க வம்சாவளி தடகள வீரர்களால் இந்தியாவின் பதக்கம் குறைந்ததா?
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி நியூசிலாந்து விளையாடி வருகிறது. இந்த நிலையில், தான் உலகக் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளுக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவச குடிநீர் வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். முதல் போட்டியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள் என்று பிசிசிஐ எதிர்பார்த்து காத்திருந்தது. இதற்காகத்தான் முதல் போட்டியை அகமதாபாத் மைதானத்தில் வைத்தது.
அதுவும் குஜராத், நரேந்திர மோடி மைதானம். ஆனால், மைதானம் முழுவதுமே காலி இருக்கைகள் தான். வெறிச்சோடி காணப்பட்ட நிலை தான் மிச்சம். எனினும், பிசிசிஐ சார்பில் 40000 ரசிகர்கள் முதல் போட்டியை காண வந்துள்ளார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. ஆனால், அதெல்லாம் உண்மையில்லை என்று சிலர் விமர்சிக்கின்றனர். போட்டி தொடங்குவற்கு சில மணி நேரம் முன்பே ரசிகர்கள் வராத நிலையில் பிசிசிஐ இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டது.