சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற ஜெயிச்சே தீரணும்..! பப்புவா நியூ கினிக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேசத்தின் முடிவு

By karthikeyan VFirst Published Oct 21, 2021, 3:34 PM IST
Highlights

பப்புவா நியூ கினிக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. 17ம் தேதி முதல் தகுதிச்சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன. 22ம் தேதியுடன் தகுதி போட்டிகள் முடிவடையும் நிலையில், 23ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன.

க்ரூப் பி சுற்றில் ஸ்காட்லாந்து, வங்கதேசம், ஓமன் ஆகிய 3 அணிகளில் 2 சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 3 போட்டிகளில் ஆடும். க்ரூப் பி-யில் ஸ்காட்லாந்து, வங்கதேசம், ஓமன், பப்புவா நியூ கினி ஆகிய 4 அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இதில் அனைத்து அணிகளுமே தலா 2 போட்டிகளில் ஆடியுள்ளன. பப்புவா நியூ கினி இரண்டிலும் தோற்று சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. ஸ்காட்லாந்து அணி 2 போட்டிகளில் ஆடி இரண்டிலுமே வெற்றி பெற்று 4  புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஓமன் மற்றும் வங்கதேச அணிகள் தலா 2 போட்டிகளில் ஆடி ஒரு வெற்றியை பெற்றுள்ளன. நெட் ரன்ரேட்டின் படி ஓமன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், வங்கதேச அணி இன்றைய போட்டியில் பப்புவா நியூ கினியையும், ஓமன் அணி ஸ்காட்லாந்தையும் எதிர்கொள்கிறது. பி.என்.ஜி அணியை  வங்கதேசம் வீழ்த்தி, ஸ்காட்லாந்தை ஓமன் வீழ்த்தினால், ஸ்காட்லாந்து, வங்கதேசம், ஓமன் ஆகிய 3 அணிகளுமே தலா 4 புள்ளிகளை பெறும். அதில் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

ஒருவேளை வங்கதேசம் பப்புவா நியூ கினியை வீழ்த்தி, ஓமன் அணி ஸ்காட்லாந்திடம் தோற்றால், வங்கதேசம் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிவிடும். எனவே பப்புவா நியூ கினிக்கு பெரிய வெற்றியை எதிர்நோக்கி இறங்கியுள்ள வங்கதேச அணி, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

வங்கதேச அணி:

முகமது நைம், லிட்டன் தாஸ், மஹிடி ஹசன், ஷகிப் அல் ஹசன், நூருல் ஹசன்(விக்கெட் கீப்பர்), அஃபிஃப் ஹுசைன், மஹ்மதுல்லா(கேப்டன்), முஷ்ஃபிகுர் ரஹீம், முகமது சைஃபுதீன், டஸ்கின் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

பப்புவா நியூ கினி அணி:

லீகா சியாகா, அசாத் வாலா(கேப்டன்), சார்லஸ் அமினி, சேசே பாவ், சைமன் அட்டாய், ஹிரி ஹிரி, நார்மன் வனுவா, கிப்லின் டோரிகா(விக்கெட் கீப்பர்), சாத் சோபர், காபுவா மோரியா, டேமியன் ராவு.
 

click me!