
வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது.
கயானாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இதையும் படிங்க - ரோஹித் சர்மா மாபெரும் சாதனை.. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் டாப் இந்திய வீரர்..! சர்வதேச அளவில் 4ம் இடம்
வங்கதேச அணி:
தமீம் இக்பால் (கேப்டன்), லிட்டன் தாஸ், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மொசாடெக் ஹுசைன், மெஹிடி ஹசன், நசும் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம்.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
கைல் மேயர்ஸ், ஷேய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ஷமர் ப்ரூக்ஸ், பிரண்டன் கிங், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோவமன் பவல், கீமோ பால், ரொமாரியோ ஷெஃபெர்டு, அகீல் ஹுசைன், குடாகேஷ் மோட்டி, அல்ஸாரி ஜோசஃப்.
முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர். மெஹிடி ஹசன் மற்றும் நசும் அகமதுவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அவர்கள் இருவரிடமும் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதையும் படிங்க - 2023ல் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா ஆடமுடியாது..? இதுதான் காரணம்
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கீமோ பால் 25 ரன்கள் அடித்தார். ஷேய் ஹோப் 18 ரன்களும், கைல் மேயர்ஸ் 17 ரன்களும் அடித்தனர். பூரன், ப்ரூக்ஸ், ரோவ்மன் பவல், பிரண்டன் கிங் ஆகிய அனைவருமே சொதப்ப 35 ஓவரில் வெறும் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ் அணி.
வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக மெஹிடி ஹசன் 4 விக்கெட்டுகளும், நசும் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வங்கதேச அணி ஒருநாள் தொடரை வெல்ல வெறும் 109 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் அதை எளிதாக அடித்து வெற்றி பெற்றுவிடும்.