வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் வாகனங்களை தாக்கிய ரசிகர்கள்..! கடும் கோபம்..! என்ன நடந்தது?

Published : Oct 16, 2025, 10:15 PM IST
Bangladesh team (Photo: @ICC/X)

சுருக்கம்

Bangladesh Team Attacked By Fans: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஓடிஐ தொடரில் வங்கதேசம் படுதோல்வி அடைந்த நிலையில், அந்த அணி வீரர்களின் வாகனங்கள் மீது ரசிகர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த பிறகு, நாடு திரும்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டாக்கா விமான நிலையத்தில் வங்கதேச வீரர்களுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டுள்ளனர். மேலும் வங்கதேச வீரர்களின் வாகனங்களையும் ரசிகர்கள் தாக்கியதாக அந்த அணி வீரர் முகமது நயீம் ஷேக் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆப்கானுக்கு எதிராக வங்கதேச அணி படுதோல்வி

கேப்டன் மெஹ்தி ஹசன் மிராஸ் தலைமையிலான ஓடிஐ தொடரின் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்தது. முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் 81 ரன்கள் மற்றும் 200 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது. இந்த தொடர் தோல்வியை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் வங்கதேச அணிக்கு எதிராக அந்நாட்டு ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

வங்கதேச அணி வாகனம் மீது தாக்குதல்

மெஹ்தி ஹசனின் கேப்டன்சியில் அணி ஒருநாள் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் பத்து போட்டிகளில் ஒன்பதில் தோல்வியடைந்துள்ளது. வங்கதேச வீரர்களின் வாகனங்கள் மீதான தாக்குதலுக்கு அந்நாட்டு வீரர் முகமது நயீம் ஷேக் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட முகமது நயீம் ஷேக், ''நாங்கள் களத்தில் இறங்கும்போது, விளையாடுவது மட்டுமல்ல, எங்கள் நாட்டின் பெயரை நெஞ்சில் சுமக்கிறோம். சிவப்பு மற்றும் பச்சை நிறக் கொடிகள் எங்கள் உடலில் மட்டுமல்ல; அது எங்கள் ரத்தத்திலும் உள்ளது.

வெற்றி, தோல்வி யதார்த்தம்

ஒவ்வொரு பந்திலும், ஒவ்வொரு ஓட்டத்திலும், ஒவ்வொரு சுவாசத்திலும், அந்தக் கொடியை பெருமைப்படுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம். சில நேரங்களில் நாங்கள் வெற்றி பெறுகிறோம், சில நேரங்களில் நாங்கள் தோல்வியடைகிறோம். வெற்றியும், தோல்வியும் விளையாட்டின் யதார்த்தம். நாங்கள் தோற்கும்போது அது உங்களைக் காயப்படுத்தும், கோபப்படுத்தும் என்று எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் நீங்களும் எங்களைப் போலவே இந்த நாட்டை நேசிக்கிறீர்கள்."

நாங்களும் மனிதர்கள் தான்

"ஆனால் இன்று எங்கள் மீது காட்டப்பட்ட வெறுப்பு, எங்கள் வாகனங்கள் மீதான தாக்குதல், அது உண்மையிலேயே வலிக்கிறது. நாங்களும் மனிதர்கள்தான். நாங்கள் தவறுகள் செய்கிறோம், ஆனால் நமது நாட்டின் மீதான அன்போ, முயற்சியோ ஒருபோதும் குறைவதில்லை. ஒவ்வொரு கணமும், நாட்டுக்காக, மக்களுக்காக, உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.

மீண்டும் எழுந்து நிற்போம்

எங்களுக்குத் தேவையானது அன்பு, வெறுப்பு அல்ல. விமர்சனம் கோபத்துடன் அல்ல, உரிமையுடன், அன்புடன் வரட்டும். ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே கொடியின் பிள்ளைகள். நாம் ஜெயித்தாலும் தோற்றாலும், சிவப்பும் பச்சையும் எப்போதும் நம் அனைவருக்கும் பெருமையின் ஆதாரமாக இருக்கட்டும். உங்களுக்காக, நாட்டுக்கக நாங்கள் போராடுவோம், மீண்டும் எழுந்து நிற்போம்'' என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!