டி20 உலக கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் வங்கதேச அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. இன்று ஹோபர்ட்டில் நடந்த முதல் போட்டியில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் ஷாண்டோ(25) மற்றும் சௌமியா சர்க்கார் (14) நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 5 ஓவரில் 43 ரன்கள் அடித்து கொடுத்தனர். அதன்பின்னர் லிட்டன் தாஸ்(9) மற்றும் ஷகிப் அல் ஹசன் (7) ஏமாற்றமளித்தனர். அஃபிஃப் ஹுசைன் பொறுப்புடனும் அடித்தும் ஆடி 27 பந்தில் 38 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 144 ரன்கள் அடித்தது வங்கதேச அணி.
undefined
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: கிங் கோலியையே ஊக்கப்படுத்திய ஹர்திக் பாண்டியாவின் வார்த்தைகள்
145 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணியில் காலின் ஆக்கர்மேன் மட்டுமே சிறப்பாக ஆடினார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த காலின் ஆக்கர்மேன் 48 பந்தில் 62 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 17வது ஓவரில் 9வது விக்கெட்டாக ஆக்கர்மேன் ஆட்டமிழக்க, கடைசி வீரராக இறங்கிய பால் வான் மீகரென் சிறப்பாக ஆடி 14 பந்தில் 24 ரன்கள் அடித்தார். ஆனாலும் நெதர்லாந்து அணியால் இலக்கை அடிக்க முடியவில்லை.
இதையும் படிங்க - சேஸிங்கில் நான் “கிங்”டா.. மெல்பர்னில் பாகிஸ்தானை பட்டாசாக வெடித்து தீபாவளி கொண்டாடிய கோலி
20 ஓவரில் 135 ரன்கள் அடித்து 9 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது நெதர்லாந்து அணி. நெதர்லாந்து அணி கடுமையாக போராடியது. ஆனாலும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. இந்த உலக கோப்பையை வங்கதேச அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.