SL vs PAK: சதமடித்து தனி ஒருவனாக பாகிஸ்தானை காப்பாற்றிய பாபர் அசாம்

Published : Jul 17, 2022, 04:57 PM IST
SL vs PAK: சதமடித்து தனி ஒருவனாக பாகிஸ்தானை காப்பாற்றிய பாபர் அசாம்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் பாபர் அசாமின் அபாரமான சதத்தால் 218 ரன்களாவது அடித்தது  பாகிஸ்தான் அணி.  

பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இலங்கை அணியில் தினேஷ் சண்டிமால் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். தினேஷ் சண்டிமால் 76 ரன்கள் அடித்தார். தொடக்க வீரர் ஒஷாடா ஃபெர்னாண்டோ 35 ரன்களும், பின்வரிசையில் மஹீஷ் தீக்‌ஷனா 38 ரன்களும் அடித்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 222 ரன்கள் அடித்தது. 

இதையும் படிங்க - விராட் கோலியை நீக்குமளவிற்கு தில்லான தேர்வாளர் இந்தியாவில் பிறக்கவே இல்ல

பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அஃப்ரிடி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், ஹசன் அலி மற்றும் யாசிர் ஷா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் மற்ற அனைத்து வீரர்களும் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய பாபர் அசாம் சதமடித்தார். பாகிஸ்தான் அணியை சதமடித்து தனி ஒருவனாக கரைசேர்த்தார் பாபர் அசாம். 148 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான் அணி. மறுமுனையில் நசீம் ஷாவை நிறுத்திக்கொண்டு அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த பாபர் அசாம், கடைசி விக்கெட்டுக்கு 70 ரன்களை சேர்க்கச்செய்தார்.

இதையும் படிங்க - அந்த ஷாட்டை மொத்தமாவே தடை செய்யணும்..! அஷ்வின் கருத்துக்கு வலுசேர்க்கும் ஸ்காட் ஸ்டைரிஸ்

அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த பாபர் அசாம் 119 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 218 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி. 4 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவருகிறது இலங்கை அணி.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!