இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு அசாருதீன் சொல்லும் தீர்வு.. இலங்கைக்கு எதிரா அவர கண்டிப்பா டீம்ல எடுக்கணும்.. அசார் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 6, 2019, 1:39 PM IST
Highlights

ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் பெரிய ஷாட்டுகள் ஆடுகின்றனர். கேதர் ஜாதவ் சோபிக்காததை அடுத்து அவருக்கு பதிலாக வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். 
 

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது. இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இன்றைய கடைசி போட்டியில் இலங்கை அணியுடன் மோதுகிறது. 

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் பவுலிங்கும் சிறப்பாக உள்ளது. ஆனால் இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த மிடில் ஆர்டர் பேட்டிங் இன்னும் சிக்கலாகவே இருக்கிறது. இந்திய அணி டாப் ஆர்டர் பேட்டிங்கை அதிகமாக சார்ந்திருக்கிறது. ரோஹித், கோலி ஆகியோரின் பங்களிப்புதான் அதிகமாக உள்ளது. இவர்கள் இருவரில் ஒருவர் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இருவரும் ஏமாற்றிவிட்டால் இந்திய அணியின் நிலை பரிதாபமாகிவிடும். மிடில் ஆர்டரில் தோனி - கேதர் ஜாதவின் மந்தமான பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள்ளானது. ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் பெரிய ஷாட்டுகள் ஆடுகின்றனர். கேதர் ஜாதவ் சோபிக்காததை அடுத்து அவருக்கு பதிலாக வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். 

ஆனாலும் மிடில் ஆர்டர் பேட்டிங் வலுவாக இல்லையென கருதும் முன்னாள் கேப்டன் அசாருதீன், பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்தும் விதமாக ஜடேஜாவை அணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அசாருதீன், ஜடேஜா சிறந்த வீரர். பேட்டிங் ஆர்டரில் ஜடேஜா வலுசேர்ப்பார். இங்கிலாந்து கண்டிஷனில் நன்றாக பந்துவீசி விக்கெட்டும் எடுக்க வல்லவர். அபாரமான ஃபீல்டரும் கூட. எனவே இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவை சேர்க்க வேண்டும். அவரது இணைப்பு மிடில் ஆர்டரில் வலுசேர்க்கும் என்று அசாருதீன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!