தோனி பேட்டை மாத்தி மாத்தி யூஸ் பண்றது ஏன் தெரியுமா..? காரணத்தை பாருங்க.. தோனியை புடிக்காதவங்களுக்குக்கூட புடிக்கும்

By karthikeyan VFirst Published Jul 6, 2019, 12:32 PM IST
Highlights

BAS, SS, SG ஆகிய பேட்டுகளை மாற்றி மாற்றி பயன்படுத்துவதை ரசிகர்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அது ஏன் என்ற காரணம் தெரியுமா..? தெரிந்துகொள்ளுங்கள்...

இந்திய அணிக்கு மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் தோனி, தனது கெரியரின் இறுதிக்கட்டத்தில் உள்ளார்.

உலக கோப்பையில் ஆடிவரும் தோனி, ஒரே இன்னிங்ஸில் வெவ்வேறு பேட்டுகளை பயன்படுத்திவருகிறார். அதை ரசிகர்கள் தோனியின் பேட்டிங்கின்போது பார்த்திருக்கக்கூடும். உலக கோப்பையில் மட்டுமல்ல; இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே அப்படித்தான் உபயோகித்துவருகிறார்.

BAS, SS, SG ஆகிய பேட்டுகளை மாற்றி மாற்றி பயன்படுத்துகிறார். தோனி ஏன் இப்படி பேட்டை மாற்றி மாற்றி ஆடுகிறார் என்று ரசிகர்கள் யோசித்திருக்கக்கூடும். 

தோனி வெவ்வேறு பேட்டுகளை பயன்படுத்துவதற்கான காரணத்தை அவரது மேனேஜர் அருண் வெளிப்படுத்தியுள்ளார். தனது கிரிக்கெட் வாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தனக்கு ஆதரவாக பேட் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்த பேட்டுகளை பயன்படுத்துகிறார். அந்த பேட் நிறுவனங்களுடன் எந்தவித ஒப்பந்தமும் இல்லாதபோதிலும் பணம் எதுவும் வாங்காமல், தனது நன்றியை தெரிவிக்கும் விதமாக அந்த பேட்டுகளை பயன்படுத்திவருகிறார்.

தனது கிரிக்கெட் வாழ்வின் தொடக்க காலம் மற்றும் இக்கட்டான காலத்தில் ஆதரவாக இருந்த BAS பேட்டை அந்த நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பயன்படுத்திவருகிறார். SS, SG ஆகிய நிறுவனங்களும் பல காலக்கட்டங்களில் தோனிக்கு ஆதரவாக இருந்துள்ளன. எனவே அந்த நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தோனி அந்த பேட்டுகளை பயன்படுத்துகிறார். தோனியின் நன்றி மறவா குணத்தையும் அவரது பெருந்தன்மையையும் கண்டு அந்த நிறுவனங்கள் வியந்து பாராட்டியுள்ளன. 

தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் தோனி, தனது கெரியரில் தனக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருந்த பேட் நிறுவனங்களுக்கு நன்றியை தெரிவிக்கும் விதமாக இவ்வாறு செய்துவருகிறார். தோனியின் நன்றி மறவா குணம் கிரிக்கெட் உலகை மட்டுமல்லாமல் பொதுவெளியிலும் அவர் மீதான மதிப்பை உயர்த்தியுள்ளது. 
 

click me!