நான் என்ன செய்யணும்னு சொல்லிட்டாங்க.. போன தடவை மிஸ் ஆயிடுச்சு.. அடுத்த தடவை தெறிக்கவிடுறேன் பாருங்க.. தினேஷ் கார்த்திக் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 6, 2019, 12:00 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவுக்கு பதில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சோபிக்கவில்லை. 

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் முடியவுள்ள நிலையில், ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட இந்திய அணி, இன்று கடைசி போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. 

இந்திய அணியில் நீண்டகாலமாக ஆடிவரும் தினேஷ் கார்த்திக், தனது முதல் உலக கோப்பை போட்டியை வங்கதேசத்துக்கு எதிராகத்தான் ஆடினார். 2007 உலக கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இந்த உலக கோப்பையிலும் முதல் 7 போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவுக்கு பதில் களமிறங்கினார். ஆனால் அந்த போட்டியில் சோபிக்கவில்லை. ஆனாலும் இனிவரும் போட்டிகளில் கேதருக்கு பதில் தினேஷ் கார்த்திக் தான் இறக்கப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. 

இலங்கைக்கு எதிரான போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக், அணி நிர்வாகம் தனது ரோல் என்ன என்பதை தெளிவுபடுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், அணி நிர்வாகம் எனது ரோல் என்ன என்பதை தெளிவுபடுத்திவிட்டார்கள். இந்திய அணி இரண்டாவது பேட்டிங் ஆடினால் நான் 7வது வரிசையில் இறங்கினால் சூழலுக்கு ஏற்றவாறு பேட்டிங் ஆடவேண்டும். அதேவேளையில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடும்பட்சத்தில், நான் இறங்கும் சமயத்தில் என்ன ரன்ரேட் தேவையோ அதை உறுதி செய்ய வேண்டும். இதுதான் என் ரோல். வங்கதேசத்துக்கு எதிராக என்னால் திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியவில்லை. இனிவரும் போட்டிகளில் கண்டிப்பாக சிறப்பாக ஆடுவேன் என்று தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 

click me!