இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. இலங்கைக்கு எதிராக களமிறங்கும் உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Jul 6, 2019, 10:30 AM IST
Highlights

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் லீக் போட்டிகள் முடிகின்றன. லீக் சுற்றின் கடைசி 2 போட்டிகள் இன்று நடக்கின்றன. ஒரு போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளும் மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளும் மோதுகின்றன. 
 

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் லீக் போட்டிகள் முடிகின்றன. 

ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், லீக் சுற்றின் கடைசி 2 போட்டிகள் இன்று நடக்கின்றன. ஒரு போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளும் மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளும் மோதுகின்றன. 

இந்த போட்டிகளின் முடிவுகள் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்திவரும் இந்திய அணி, கடைசி லீக் போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது. 

விஜய் சங்கருக்கு பதிலாக இந்திய அணியில் இணைந்துள்ள டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மயன்க் அகர்வால், இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது. தவான் காயத்திற்கு பிறகு தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல், பெரிதாக சோபிக்கவில்லை. நிதானமாக தொடங்கும் ராகுல், அவர் ஆடிய பந்துகளுக்கும் ரன்களுக்கும் இடையேயான  வித்தியாசத்தை ஈடுகட்டாமலேயே அவுட்டாகிவிடுகிறார் அல்லது தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்துவிடுகிறார். அவர் தொடக்க வீரராக நம்பிக்கையளிக்காததால், காயத்தால் விலகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விஜய் சங்கருக்கு பதிலாக தொடக்க வீரர் மயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டார். 

எனவே இன்றைய போட்டியில் மயன்க் அகர்வால், இந்திய அணிக்காக தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது. மயன்க்கை தொடக்க வீரராக களமிறக்கும் எண்ணம் இந்திய அணிக்கு உள்ளதால்தான் அவரை அணியில் எடுத்துள்ளது. எனவே நேரடியாக அவரை நாக் அவுட் சுற்றில் தொடக்க வீரராக களமிறக்க வாய்ப்பில்லை. அதனால் இன்றைய போட்டியில் இறக்கிவிட வாய்ப்புள்ளது. அதனால் நான்காம் வரிசையில் ஆடும் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ராகுல் மீண்டும் நான்காம் வரிசையில் இறக்கப்படலாம். 

அதேபோல கடந்த போட்டியில் ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய 3 ஃபாஸ்ட் பவுலர்களுடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில், இன்றைய போட்டியில் ஷமி அல்லது புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு மீண்டும் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் ஆடிய தினேஷ் கார்த்திக் தான் இந்த போட்டியிலும் ஆடுவார். கேதர் ஜாதவ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், விராட் கோலி(கேப்டன்), ராகுல், தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார்/ஷமி, குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா. 
 

click me!