#INDvsENG அக்ஸர் படேலின் முதல் விக்கெட்டே முரட்டு விக்கெட்..! மளமளவென சரியும் இங்கிலாந்து பேட்டிங் ஆர்டர்

Published : Feb 14, 2021, 11:46 AM IST
#INDvsENG அக்ஸர் படேலின் முதல் விக்கெட்டே முரட்டு விக்கெட்..! மளமளவென சரியும் இங்கிலாந்து பேட்டிங் ஆர்டர்

சுருக்கம்

சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக அமைய, இங்கிலாந்து பேட்டிங் ஆர்டரை இந்திய பவுலர்கள் சரித்துவருகின்றனர்.  

இந்தியா இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி சதம்(161), ரஹானே(67) மற்றும் ரிஷப் பண்ட்டின்(58) அரைசதம் ஆகியவற்றால் முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் அடித்தது. 

2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் காலை முதல் செசனில் இந்திய அணி கடைசி 4 விக்கெட்டுகளை இழந்து ஆல்  அவுட்டாக, அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸை முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. பர்ன்ஸ் டக் அவுட்டாகி வெளியேற, அடித்து ஆடிய சிப்ளியை 16 ரன்னில் அஷ்வின் வீழ்த்தினார்.

அஷ்வின் வீசிய பந்து சிப்ளி எதிர்பார்த்ததை விட எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆக, அதை சமாளிக்க முடியாமல் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சிப்ளி. அதன்பின்னர் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும் 6 ரன்னில் அக்ஸர் படேலின் சுழலில் வீழ்ந்தார்.

அறிமுக போட்டியில் ஆடும் அக்ஸர் படேல், தனது முதல் சர்வதேச டெஸ்ட் விக்கெட்டாக, சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஜோ ரூட்டை வீழ்த்தினார். ரூட்டின் விக்கெட் அக்ஸர் படேலுக்கு மட்டும் ஸ்பெஷலான விக்கெட் இல்லை; இந்திய அணிக்கே மிக முக்கியமான விக்கெட். உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி ஓவரின் கடைசி பந்தில் லாரன்ஸை 9 ரன்னில் அஷ்வின் வீழ்த்த, உணவு இடைவேளையின்போது, 4 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் அடித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி