சூப்பர் ஓவரை நானே வீசுறேன்.. கேப்டன் ரிஷப் பண்ட்டை ஒப்புக்கொள்ள வைத்தது எப்படி..? அக்ஸர் படேல் ஒபன் டாக்

By karthikeyan VFirst Published Apr 26, 2021, 8:48 PM IST
Highlights

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரை வீச, கேப்டன் ரிஷப் பண்ட்டை ஒப்புக்கொள்ள வைத்தது எப்படி என்று அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி 20 ஓவரில் 159 ரன்கள் அடித்தது.

160 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணியில் கேன் வில்லியம்சன் மட்டுமே தனி நபராக போராடினார். ஆனால் அவருக்கு மறுமுனையில் எந்த வீரரும் ஒத்துழைப்பு கொடுக்காமல் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். அதுவும் பந்துகளை வீணடித்துவிட்டு ஆட்டமிழந்தனர். ஆனாலும் தனி நபராக கடைசி வரை எடுத்துச்சென்ற கேன் வில்லியம்சனால் சன்ரைசர்ஸுக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடியவில்லை. ஆனால் டை ஆக உதவினார் வில்லியம்சன்.

160 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணி, 159 ரன்கள் அடிக்க போட்டி டை ஆனது. இதையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரில் டெல்லி அணி வென்றது. சூப்பர் ஓவரை டெல்லி அணி சார்பில் ஆவேஷ் கான் வீசுவதாகவே முதலில் திட்டமிடப்பட்டது. 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஆவேஷ் கானைத்தான் சூப்பர் ஓவர் வீசவைப்பதாக தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும், கேப்டன் ரிஷப் பண்ட்டும் சேர்ந்து முடிவெடுத்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் கேப்டன் ரிஷப் பண்ட்டிடம், தானே சூப்பர் ஓவரை வீசுவதாக பேசி ஒப்புக்கொள்ளவைத்த அக்ஸர் படேல், சூப்பர் ஓவரை அருமையாக வீசி வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, டெல்லி அணி வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தார். இந்த சீசனில் அவர் ஆடிய முதல் போட்டியிலேயே டெல்லி அணியின் வெற்றிக்கு உதவினார்.

போட்டிக்கு பின்னர், அந்த சூப்பர் ஓவரை வீச, கேப்டன் ரிஷப் பண்ட்டை ஒப்புக்கொள்ள வைத்தது எப்படி என்று விவரித்தார். இதுகுறித்து பேசிய அக்ஸர் படேல், இந்த பிட்ச்சில்(சென்னை சேப்பாக்கம் ஆடுகளம்) ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்கோர் செய்வது கடினம் என்று உறுதியாக நம்பினேன். ஃபாஸ்ட் பவுலரை விட ஒரு ஸ்பின்னர் இந்த பிட்ச்சில் சிறப்பாக செயல்பட முடியும் என நம்பினேன். 

அதனால், ரிஷப் பண்ட்டிடம் சென்று, இடது கை பேட்ஸ்மேன் ஒருபக்க பவுண்டரியை டார்கெட் செய்து அடிப்பதில் உள்ள சிக்கலையும், வலது கை பேட்ஸ்மேன் குறைந்த பக்க பவுண்டரியை டார்கெட் செய்து அடிப்பதை தவிர்ப்பது எப்படி என்றும் விளக்கி, நானே சூப்பர் ஓவரை வீசினேன் என்று அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.
 

click me!