#PBKSvsKKR எங்க பசங்க மேல நம்பிக்கை இருக்கு - கேகேஆர் கேப்டன் மோர்கன்..! பஞ்சாப் கிங்ஸ் முதல் பேட்டிங்

Published : Apr 26, 2021, 07:28 PM IST
#PBKSvsKKR எங்க பசங்க மேல நம்பிக்கை இருக்கு - கேகேஆர் கேப்டன் மோர்கன்..! பஞ்சாப் கிங்ஸ் முதல் பேட்டிங்

சுருக்கம்

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஒயின் மோர்கன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஒயின் மோர்கன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

கேகேஆர் அணி தொடர் தோல்விகளை தழுவினாலும், அந்த அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை மாற்றாமல், அணி வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் களமிறங்கியுள்ளது கேகேஆர் அணி.

கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், பாட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபேபியன் ஆலன் நீக்கப்பட்டு இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டான் சேர்க்கப்பட்டுள்ளார்.

 பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், பூரன், தீபக் ஹூடா, மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், ஷாருக்கான், கிறிஸ் ஜோர்டான், ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?