ஹர்ஷல் படேல் அங்கதான் பந்துபோடுவார்னு முன்னாடியே சொல்லிட்டார் தோனி..! அதான் தல - ஜடேஜா

By karthikeyan VFirst Published Apr 26, 2021, 5:25 PM IST
Highlights

ஆர்சிபிக்கு எதிரான கடைசி ஓவரில் தோனியின் அறிவுரையின் விளைவாகத்தான், அடித்து ஆடி 37 ரன்களை விளாசியதாக ஜடேஜா தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த சீசனில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, இந்த சீசனில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

இந்த சீசனின் முதல் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த ஆர்சிபி அணிக்கு முதல் தோல்வியை பரிசளித்தது சிஎஸ்கே. அதற்கு காரணம் சிஎஸ்கே ஆல்ரவுண்டர் ஜடேஜா. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து வகையிலும் அபாரமாக செயல்பட்டு, தனி நபராக ஆர்சிபியை வீழ்த்தினார்.

பேட்டிங்கில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரியும் 36 ரன்களை விளாசினார் ஜடேஜா. அந்த ஓவரில் மட்டும் நோ பாலை சேர்த்து சிஎஸ்கே அணிக்கு 37 ரன்கள் கிடைத்தது. அதனால் தான் சிஎஸ்கே அணி 191 ரன்களை குவித்தது. 192 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன்களான மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா, டேனியல் கிறிஸ்டியனை ரன் அவுட்டும் செய்தார்.

இப்படியாக அனைத்துவகையிலும் அபாரமாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதையும் வென்றார் ஜடேஜா. பேட்டிங்கில் கடைசி ஓவரில் ஜடேஜா 37 ரன்களை குவித்து கொடுத்தபோதே, ஆர்சிபியின் முமெண்டம் காலியாகிவிட்டது. 

தான் கடைசி ஓவரை எதிர்கொண்டபோது மறுமுனையில் நின்ற கேப்டன் தோனியின் ஆலோசனை தான், கடைசி ஓவரில் 37 ரன்களை குவிக்க உதவியதாக ஜடேஜா தெரிவித்துள்ளார். அதுகுறித்து பேசிய ஜடேஜா, கடைசி ஓவரில் அடித்து ஆட வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். அப்போது என்னிடம், ஹர்ஷல் படேல் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே தான் வீசுவார் என்று தோனி கூறினார். அதனால் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வரும் பந்துக்காக தயாராகவே இருந்தேன். அதிர்ஷ்டவசமாக கடைசி ஓவரில் அனைத்து ஷாட்டுகளும் கனெக்ட் ஆனது. நாங்கள் 191 ரன்களை அடித்தோம். ஒரு அணியாக எங்களுக்கு அந்த ஸ்கோர் தேவைப்பட்டது என்றார் ஜடேஜா.
 

click me!