பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ.37 லட்சம் நிதியுதவி வழங்கிய ஆஸி., வீரர் பாட் கம்மின்ஸ்..!

By karthikeyan VFirst Published Apr 26, 2021, 6:30 PM IST
Highlights

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவரும் நிலையில், பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ.37 லட்சம் நிதியுதவி செய்துள்ளார் கேகேஆர் அணியில் ஆடும் ஆஸி., ஆல்ரவுண்டர் பாட் கம்மின்ஸ்.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனாவால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும், ஆக்ஸிஜன் தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது.

இந்தியா முழுவதுமே ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவும் நிலையில், ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய இந்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்தியாவில் அதிகளவில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யவும் அவற்றை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியா கொரோனா 2ம் அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கேகேஆர் அணியில் ஆடிவரும் ஆஸி., ஆல்ரவுண்டர் பாட் கம்மின்ஸ் ரூ.37 லட்சத்தை பிரதமர் கேர்ஸ் நிதிக்கு வழங்கியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள பாட் கம்மின்ஸ், இந்தியா எனக்கு மிகவும் பிடித்த நாடு. இந்தியாவையும் இந்தியர்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தியர்கள் மிக நல்ல மனிதர்கள். இந்தியா கொரோனா 2ம் அலையால் பாதிக்கப்பட்டிருப்பது என் மனதை உலுக்குகிறது.

இந்த அசாதாரண சூழலில் இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவது குறித்து சிலர் விவாதம் செய்கின்றனர். இந்த நெருக்கடியான நிலையில், மக்களுக்கு ஐபிஎல் ஒருசில மணி நேர மகிழ்ச்சியை அளிக்கிறது. கொரோனாவை எதிர்கொள்ள பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ.37 லட்சம் அளிக்கிறேன். இது பெரிய தொகை இல்லை என்றாலும், இதை ஒரு முன்னெடுப்பாக எடுக்கிறேன். இந்தியாவை நேசிக்கும் எனது சக வீரர்களும் உதவ முன்வந்தால் மகிழ்ச்சி என்று கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
 

click me!