IND vs NZ டெஸ்ட்: சதத்தை தவறவிட்ட டாம் லேதம்.. அக்ஸர் படேலின் சுழலில் சரிந்த நியூசி., பேட்டிங் ஆர்டர்

Published : Nov 27, 2021, 02:53 PM ISTUpdated : Nov 27, 2021, 02:57 PM IST
IND vs NZ டெஸ்ட்: சதத்தை தவறவிட்ட டாம் லேதம்.. அக்ஸர் படேலின் சுழலில் சரிந்த நியூசி., பேட்டிங் ஆர்டர்

சுருக்கம்

முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்த நிலையில், 3ம் நாளான இன்றைய ஆட்டத்தில் அக்ஸர் படேலின் சுழலில் சரிந்தது நியூசிலாந்து பேட்டிங் ஆர்டர்.  

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25ம் தேதி தொடங்கி கான்பூரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. இந்திய அணியில் அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர், அபாரமாக பேட்டிங் ஆடி அறிமுக டெஸ்ட்டிலேயே சதமடித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 105 ரன்கள் அடித்தார். ஷுப்மன் கில் (52) மற்றும் ஜடேஜா (50) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். பின்வரிசையில் அஷ்வின் 38 ரன்கள் அடிக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் வில் யங் மற்றும் டாம் லேதம் ஆகிய இருவரும் இணைந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்தனர். 2ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் அடித்திருந்தது. வில் யங் 75 ரன்களுடனும், டாம் லேதம் 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

3ம் நாளான இன்றைய ஆட்டத்தை யங்கும் டாம் லேதமும் தொடர்ந்தனர். முதல் விக்கெட்டை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்த நிலையில், வில் யங்கை 89 ரன்களில் வீழ்த்தி அஷ்வின் பிரேக் கொடுத்தார். கேப்டன் கேன் வில்லியம்சனை 18 ரன்னில் உமேஷ் யாதவ் வீழ்த்த, சீனியர் வீரரான ரோஸ் டெய்லரை 11 ரன்னில் அக்ஸர் படேல் வீழ்த்தினார்.

டெய்லரை வீழ்த்திய அக்ஸர் படேல், ஹென்ரி நிகோல்ஸை வெறும் 2 ரன்னில் வெளியேற்றினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி சதத்தை நெருங்கிய டாம் லேதமை 95 ரன்னில் அக்ஸர் படேல் வீழ்த்தி அசத்தினார். அக்ஸர் படேலின் பவுலிங்கில் டாம் லேதம் இறங்கிவர, அதைக்கண்ட அக்ஸர் பந்தை ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே நன்றாக விலக்கி வீசினார். அது டாம் லேதமின் பேட்டில் அடித்து பின்னால் செல்ல, அதைப்பிடித்து ஸ்டம்பிங் செய்தார் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்.

இதையடுத்து ராச்சின் ரவீந்திரா 13 ரன்னில் ஜடேஜா பந்தில் போல்டாக, 241 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை நியூசிலாந்து அணி இழந்தது. டீ பிரேக் முடிந்து களத்திற்கு வந்த டாம் பிளண்டெல் - கைல் ஜாமிசன் ஜோடி நிதானமாக ஆடியது. 15 ஓவர்களுக்கு மேல் பேட்டிங் ஆடி 11 ரன்கள் மட்டுமே டாம் பிளண்டெலையும் அக்ஸர் படேல் வீழ்த்த, 258 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது நியூசிலாந்து அணி.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியாவின் புதிய நம்பிக்கைக்கு டாடா நிறுவனம் பரிசாக கொடுத்த கார் எது தெரியுமா.?
WI vs SA T20 World Cup 2026: Wi, SA போட்டியில் கவனம் செலுத்தும் இந்தியர்கள்..! சாதிக்கப்போவது யார்?