#IPL2021 எங்களாலும் இங்க இருக்கமுடியாது.. ஐபிஎல்லில் இருந்து விலகிய ஆஸி.,யை சேர்ந்த 2 ஆர்சிபி வீரர்கள்

By karthikeyan VFirst Published Apr 26, 2021, 2:23 PM IST
Highlights

ஆஸி.,யை சேர்ந்த 2 ஆர்சிபி வீரர்கள் ஐபிஎல் 14வது சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளனர்.
 

ஐபிஎல் 14வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவரும் நிலையிலும் ஐபிஎல் வீரர்கள், அணி நிர்வாகத்தினர் உள்ளிட்ட அனைவரையும் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் வைத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு நடத்தப்பட்டுவருகிறது. 

கொரோனா பயோ பபுளில் இருப்பது வெளிநாட்டு வீரர்களுக்கு மிகக்கடினமாக உள்ளது. ஐபிஎல்லில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்து ஆடும் வீரர்களுக்கு பரவாயில்லை. ஆனால் ஆடும் லெவனிலும் வாய்ப்பு கிடைக்காமல் பயோ பபுளில் இருக்கும் வீரர்கள் பொறுமையிழந்து வெளியேறி கொண்டிருக்கின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஆஸி., வீரரான ஆண்ட்ரூ டை, இந்தியாவில் கொரோனா அதிகரித்துவருவதால், இந்தியாவிலிருந்து வருபவர்கள் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், தன்னால் ஆஸி., செல்ல முடியாது என்பதால் இப்போதே செல்வதாக கூறி ஐபிஎல்லில் இருந்து விலகிவிட்டார்.

இந்நிலையில், ஆஸி.,யை சேர்ந்த மேலும் 2 வீரர்களான ஆடம் ஸாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்ஸன் ஆகிய இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக கூறி விலகியுள்ளனர். ஆர்சிபி அணியை சேர்ந்த ஆடம் ஸாம்பா, கேன் ரிச்சர்ட்ஸன் ஆகிய இருவருக்கும் அந்த அணியின் பிரதான ஆடும் லெவனில் இடம் கிடைப்பதில்லை. இந்நிலையில், அவர்களும் விலகியுள்ளனர்.

ஆடம் ஸாம்பாவை ரூ.1.5 கோடிக்கும் கேன் ரிச்சர்ட்ஸனை ரூ.4 கோடிக்கும் ஆர்சிபி ஏலத்தில் எடுத்திருந்தது.
 

click me!