வரும் அக்டோபர் 5 ஆம் தேதி உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று முன்னாள் வீரர் க்ளென் மெக்ராத் கூறியுள்ளார்.
உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடர் என்பதால், நேரடியாகவே தகுதி பெற்றது. இது தவிர, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் இடம் பெற்றன. சென்னை, மும்பை, பெங்களூரு என்று 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடக்கிறது.
அதிரடி ஆட்டம் காட்டிய ரியான் பராக்; தியோதர் டிராபியை கைப்பற்றிய தெற்கு மண்டலம்!
உலகக் கோப்பை 2023 தொடருக்கான அட்டவணை சில மாதங்களுக்கு முன்பு வெளியனது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதையடுத்து 15 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆனால், அக்டோபர் 15 ஆம் தேதி நவராத்திரி திருவிழா என்பதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சிக்கல் ஏற்படும் என்பதால், அகமதாபாத்தில் 15 ஆம் தேதி நடக்க வேண்டிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் 14 ஆம் தேதிக்கு மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை.
இந்திய அணிக்கு 5 சதவிகிதமும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 10 சதவிகிதமும் அபராதம்!
பொதுவாக சீரிஸ் அல்லாமல் முக்கியமான போட்டிகளில் எல்லாம் எந்த அணி டிராபியை கைப்பற்றும், எந்த அணி அரையிறுதிக்கு செல்லும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து சொல்வது வழக்கம். அந்த வகையில் தான் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான க்ளென் மெக்ராத் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாது மற்றும் பாகிஸ்தான் அணிகள் தான் அரையிறுதிப் போட்டிக்கு செல்லும் என்று தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
மற்ற அணிகளுக்கு வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார். அதில் முக்கியமான நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.