ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஓய்வு..!

Published : Aug 21, 2020, 10:57 PM IST
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஓய்வு..!

சுருக்கம்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கேமரூன் ஒயிட் ஓய்வு அறிவித்துள்ளார்.   

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் டி20 கேப்டன் மற்றும் ஆல்ரவுண்டர் கேமரூன் ஒயிட். 2005ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஒயிட், 2018ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடர் வரை ஆடினார்.

2010 டி20 உலக கோப்பையில் இறுதி போட்டி வரை சென்ற ஆஸ்திரேலிய அணியில் ஒயிட் ஆடினார். பேட்டிங் மற்றும் ஸ்பின் பவுலிங் வீசக்கூடிய ஆல்ரவுண்டரான ஒயிட், ஆஸ்திரேலிய அணிக்காக 91 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2072 ரன்களையும் 47 டி20 போட்டிகளில் 984 ரன்களையும் அடித்துள்ளார். நான்கே நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் ஒயிட்.

2018ம் ஆண்டுக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணியில் ஆடாத கேமரூன் ஒயிட் ஓய்வு அறிவித்துள்ளார். ஐபிஎல்லில் ஆர்சிபி, டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளில் ஆடியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி