IND vs AUS T20 WC 2024: பழிக்கு பழி வாங்குமா இந்தியா? டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்!

By Rsiva kumar  |  First Published Jun 24, 2024, 7:55 PM IST

இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.


செயிண்ட் லூசியாவில் நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டி தற்போது நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்த மைதானத்தில் நடைபெற்ற 4 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றிருக்கிறது.

இந்திய அணியைப் பொறுத்த வரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், ஆஸ்திரேலியா அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆஷ்டன் அகர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மிட்செல் ஸ்டார்க் அணியில் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா விளையாடிய 2 சூப்பர் 8 சுற்று போட்டியிலும் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றியிருக்கிறார்.

Tap to resize

Latest Videos

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா.

ஆஸ்திரேலியா:

டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹசல்வுட்.

இதற்கு முன்னதாக இரு அணிகளும் 5 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 3 போட்டியிலும், ஆஸ்திரேலியா 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதே போன்று இரு அணிகளும் விளையாடிய 31 டி20 போட்டிகளில் 19 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. அதோடு, 11 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியதற்கு இந்தப் போட்டி பழிதீர்க்கும் போட்டியாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அரையிறுதிப் போட்டி வாய்ப்பை இழக்கும் நிலை உண்டாகும். அதோடு, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை பெறும்.

click me!