IND vs AUS: முதல் டெஸ்ட் போட்டி டாஸ் ரிப்போர்ட்! இந்திய அணியில் 2 வீரர்கள் அறிமுகம்; 3 ஸ்பின்னர்கள் யார் யார்?

By karthikeyan VFirst Published Feb 9, 2023, 9:23 AM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்றூ தொடங்குகிறது. இந்த தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் முக்கியமான தொடர் என்பதால் இரு அணிகளும் வெற்றி வேட்கையுடன் களமிறங்குகின்றன. இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடர்.

நாக்பூரில் நடக்கும் இந்த முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கொஞ்சம் கூட தயக்கமின்றி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆடுகளம் போகப்போக ஸ்பின்னிற்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என்பதால், பேட்டிங் சவாலாக இருக்கும். அதனால் ஃப்ரெஷ் பிட்ச்சில் பேட்டிங் ஆடுவது தான் சிறந்தது என்ற வகையில், ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை விவகாரத்திற்கு தீர்வு சொன்ன அப்துல் ரசாக்! இவரா இப்படி பேசுறது? வியப்பில் ஆழ்ந்த கிரிக்கெட் உலகம்

இந்திய அணி 3 ஸ்பின்னர்கள் மற்றும் 2 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடுகிறது. அஷ்வின், ஜடேஜாவுடன் 3வது ஸ்பின்னராக அக்ஸர் படேல் ஆடுகிறார். ரோஹித்துடன் தொடக்க வீரராக கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் ஆகிய இருவரில் யார் இறங்குவார் என்பது பெரிய கேள்வியாக இருந்த நிலையில், கேஎல் ராகுல் தொடக்க வீரராக ஆடுகிறார். ஷுப்மன் கில் டாப் ஃபார்மில் இருக்கிறார். ஆனால் ராகுல் தான் இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால், செம ஃபார்மில் இருந்தாலும் கூட கில் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டு, ராகுல் தொடக்க வீரராக ஆடுகிறார்.

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகின்றனர். ஃபாஸ்ட் பவுலர்களாக முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரும் ஆடுகின்றனர்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரீகர் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்.

IND vs AUS: டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே அஷ்வினை நினைத்து அலறும் ஆஸி., தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா

ஆஸ்திரேலிய அணியில் டாட் மர்ஃபி என்ற ஸ்பின்னர் அறிமுகமாகிறார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்டுக்கு பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆடுகிறார். 

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், மேட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் லயன், டாட் மர்ஃபி, ஸ்காட் போலந்த்.
 

click me!