முதல் டி20 போட்டியில் சமபலத்துடன் மோதும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா..! டாஸ் வென்ற ஃபின்ச்சின் அதிரடி முடிவு

By karthikeyan VFirst Published Sep 4, 2020, 10:23 PM IST
Highlights

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
 

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. முதலில் டி20 தொடர் நடக்கிறது.

முதல் டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி 10.30 மணிக்கு போட்டி தொடங்குவதால் 10 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச், பவுலிங்கை தேர்வு செய்து, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

இரு அணிகளுமே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சமபலத்துடன் திகழ்வதால் போட்டி கடுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, பட்லர், டேவிட் மாலன், டாம் பாண்ட்டன், இயன் மோர்கன் என பெரும் அதிரடி பேட்டிங் படையே இருக்கிறது என்றால், ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியிலும் வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி என அதிரடி பேட்டிங் படை  உள்ளது.

இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர்கள் மொயின் அலி, கிறிஸ் ஜோர்டான் என்றால், ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் அஷ்டன் அகர் உள்ளனர். இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட் என்றால், ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் என இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த வலுவான அணிகளாக திகழ்வதால் போட்டி கடுமையாக இருக்கும்.

இங்கிலாந்து அணி:

ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், டாம் பாண்ட்டன், இயன் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, கிறிஸ் ஜோர்டான், டாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட், அடில் ரஷீத்.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா.
 

click me!