ஐபிஎல்லில் மலிங்கா, பும்ரா மாதிரியான பவுலர்கள் கூட செய்யாத சாதனையை 2 முறை செய்த யுவராஜ் சிங்

By karthikeyan VFirst Published Sep 4, 2020, 9:49 PM IST
Highlights

ஐபிஎல்லில் யுவராஜ் சிங் 2 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அனைத்து ஐபிஎல் அணிகளும் அங்கு சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஐபிஎல் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முழு போட்டி அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐபிஎல் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், ரசிகர்கள் தங்களது விருப்பமான அணி மற்றும் வீரர்களின் ஆட்டத்தை காண ஆவலாக உள்ளனர். இந்நிலையில், ஐபிஎல்லில் மலிங்கா, பும்ரா போன்ற பவுலர்கள் கூட செய்திராத சம்பவத்தை யுவராஜ் சிங் 2 முறை செய்து சாதித்துள்ளார் அதுகுறித்து பார்ப்போம்.

ஐபிஎல்லில் அதிகமான முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது இந்தியாவை சேர்ந்த லெக் ஸ்பின்னர் அமித் மிஷ்ரா. சீனியர் ஸ்பின்னரான இவர், ஐபிஎல்லில் 3 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதற்கடுத்த இடத்தில் இருப்பது யுவராஜ் சிங். 

யுவராஜ் சிங் ஐபிஎல்லில் 2 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2009ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய யுவராஜ் சிங், ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 2 அணிகளுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார். அமித் மிஷ்ரா, யுவராஜ் சிங்கை தவிர ஹாட்ரிக் வீழ்த்திய மற்ற அனைவருமே ஒரேயொரு முறை மட்டுமே வீழ்த்தியுள்ளனர்.

பவுலர்களுக்கே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவது கடினம். அப்படியிருக்கையில், பார்ட் டைம் ஸ்பின்னரான யுவராஜ் சிங், ஒன்றுக்கு இரண்டு முறை, அதுவும் ஒரே சீசனில் ஹாட்ரிக் வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை. யுவராஜ் சிங்கின் இந்த சாதனையை இனிமேல் வேறு யாரும் முறியடிப்பது கடினம். 

click me!