டி20 உலக கோப்பையில் அயர்லாந்துக்கு எதிரான முக்கியமான போட்டியில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
டி20 உலக கோப்பை விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், நாளைய போட்டியில் க்ரூப் 1ல் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி பிரிஸ்பேனில் நடக்கவுள்ளது.
டி20 உலக கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, அரையிறுதிக்கு முன்னேறுவதே பெரும் சவாலாகியுள்ளது.
undefined
நெதர்லாந்தை வீழ்த்தி டி20 உலக கோப்பையில் ஒருவழியா முதல் வெற்றியை பெற்ற பாகிஸ்தான்
க்ரூப் 1ல் இடம்பெற்றுள்ள அணிகள் ஆடும் போட்டிகள் பெரும்பாலும் மெல்பர்னில் திட்டமிடப்பட்ட நிலையில் மெல்பர்னில் மழை காரணமாக சில போட்டிகள் பாதிக்கப்பட்டு, புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட போட்டியும் மழையால் ரத்தாகி இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
க்ரூப் 1ஐ பொறுத்தமட்டில் நியூசிலாந்து அணி தான் வலுவான நிலையில் உள்ளது. ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் ஒரு போட்டியில் மழையால் பெற்ற ஒரு புள்ளி என மொத்தம் 5 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா 3 புள்ளிகளுடன் முறையே 2, 3 மற்றும் 4ம் இடங்களில் உள்ளன. நியூசிலாந்து அணி க்ரூப் 1லிருந்து அரையிறுதிக்கு முன்னேறிவிடும். 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளுக்குமே உள்ளது.
இங்கிலாந்து அணி கடைசி 2 போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இலங்கையை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி கடைசி 2 போட்டிகளில் அயர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளை எதிர்கொள்கிறது. இந்த 2 போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டில் ஜெயித்தால் தான் அரையிறுதி வாய்ப்பு ஆஸ்திரேலியாவிற்கு உள்ளது.
இப்படியான நெருக்கடியான நிலையில், நாளை பிரிஸ்பேனில் அயர்லாந்தை வெற்றி கட்டாயத்துடன் எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
கடைசி பந்தில் வங்கதேச விக்கெட் கீப்பர் செய்த தவறால் நோ-பால் கொடுத்த அம்பயர்..!
உத்தேச ஆஸ்திரேலிய அணி:
டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.