பாண்டிங் சொன்ன மாதிரியே நடந்துருச்சு.. லெஜண்டோட பேச்சை மீற முடியுமா..?

By karthikeyan VFirst Published Nov 28, 2019, 11:42 AM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. 
 

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.  

பிரிஸ்பேனில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 240 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லபுஷேனின் அபாரமான சதத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 580 ரன்களை குவித்தது. 340 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி, 335 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலர்களான ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகிய மூவரும் அபாரமாக பந்துவீசினர். இன்னிங்ஸிற்கு தலா 9 விக்கெட்டுகள் வீதம் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நாதன் லயன் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டார்க் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடுவது குறித்து அந்த அணி நிர்வாகத்தால் தயக்கம் காட்டப்பட்டது. ஆனால் அபாரமாக பந்துவீசி அவர் தான் முதல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை(7) வீழ்த்தினார். 

முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அபாரமாக ஆடியது ஆஸ்திரேலிய அணி. ஆனாலும் அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மைக்கேல் நெசெரை சேர்ப்பது போன்ற ஒரு பேச்சு இருந்தது. 

இதையடுத்து ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டிய தேவையில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய அதே அணி தான், பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் ஆட வேண்டும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வலியுறுத்தியிருந்தார். 

இந்நிலையில், நாளை அடிலெய்டில் நடக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், முதல் போட்டியில் அதே 11 வீரர்கள் தான் இரண்டாவது போட்டியிலும் களமிறங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டிங் அறிவுறுத்தியது போலவே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட். 
 

click me!