
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதலில் டி20 தொடர் நடந்துவரும் நிலையில், முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி:
ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஜோஷ் இங்லிஸ், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), அஷ்டான் அகர், ஜெய் ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், ஜோஷ் ஹேசில்வுட்.
இலங்கை அணி:
பதும் நிசாங்கா, தனுஷ்கா குணதிலகா, சாரித் அசலங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்ஷனா, பிரவீன் ஜெயவிக்ரமா.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் ஃபின்ச் சேர்ந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஃபின்ச்20 பந்தில் 29 ரன்களும், வார்னர் 33 பந்தில் 39 ரன்களும் அடித்தனர். மேக்ஸ்வெல் 16 ரன்னிலும் ஜோஷ் இங்லிஸ் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர்.
ஸ்மித்தும் மார்கஸ் ஸ்டோய்னிஸும் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய ஸ்மித் 27 பந்தில் 37 ரன்களும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 23 பந்தில் 38 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 175 ரன்களை குவித்து, 176 ரன்கள் என்ற சவாலான இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.