கவாஜா 50, ஸ்மித் டக் - ஆஸ்திரேலியா நிதானமான தொடக்கம்!

By Rsiva kumarFirst Published Feb 17, 2023, 11:55 AM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்து வருகிறது.
 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று டெல்லியில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

100ஆவது டெஸ்டில் புஜாரா: 2ஆவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸி, பேட்டிங்!

ஆஸ்திரேலியா:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் லயன், டாட் மர்ஃபி மற்றும் மேத்யூ குன்மேன்

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பரத் (விக்கெட் கீப்பர்), அக்‌ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்

ஹோட்டல் கிடைக்காததால், வீட்டிற்கு சென்ற கோலி: காரில் வந்து சென்று பயிற்சி!

அதன்படி டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் பேட்டிங்கை தொடங்கினர். ஆரம்பம் முதலே சொதப்பி வந்த டேவிட் வார்னர் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து ஷமி ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து மார்னஸ் லபுஷேன் களமிறங்கினார். இவர் 4 பவுண்டரிகள் அடித்து 25 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் வந்தார். ஆனால், அவர் வந்த வேகத்தில் அஸ்வின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பிறகு டிராவிஸ் ஹெட் களமிறங்கினார். ஒருபுறம் நிதானமாக ஆடிய கவாஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 20ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்தார். உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 50 ரன்னுடனும், ஹெட் ஒரு ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். இந்திய அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டும், ஷமி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்து முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்த ஹர்திக் பாண்டியா - வைரலாகும் திருமண புகைப்படங்கள்!

click me!