Lunch Break Report: அதிரடி காட்டிய வார்னர்: ஆஸ்திரேலியா 73 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumar  |  First Published Jun 7, 2023, 5:37 PM IST

இந்தியாவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உணவு இடைவேளை வரையில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் ஆடி வருகிறது. இதில், தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து மார்னஸ் லபுஷேன் களமிறங்கினார்.

லபுஷேன் கையை பதம் பார்த்த சிராஜ்: பேட்டை உதறிவிட்ட நடந்து சென்ற லபுஷேன்!

Tap to resize

Latest Videos

இந்திய அணி வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா வீரர்கள்:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவென் ஸ்மித், டிராவிட் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயான், ஸ்காட் போலந்து

ஒடிசா ரயில் விபத்து: ஒரு நிமிடம் இரங்கல் தெரிவித்து, கறுப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்!

டேவிட் வார்னர் மற்றும் லபுஷேன் இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்து வருகினர். இதில், வார்னர் 60 பந்துகளில் 8 பவுண்டரி உள்பட 43 ரன்கள் சேர்த்து ஷர்துல் தாக்கூர் ஓவரில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் டைவ் அடித்து கேட்ச் பிடித்து வார்னரின் விக்கெட்டை கைப்பற்றினார். இவரைத் தொடர்ந்து ஸ்டீவென் ஸ்மித் களமிறங்கினார்.

உணவு இடைவேளை வரையில் ஆஸ்திரேலியா 23 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 73 ரன்கள் எடுத்துள்ளது. இதில் லபுஷேன் 26 ரன்னும், ஸ்மித் 2 ரன்னும் எடுத்து விளையாடி வருகின்றனர்.

1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்திய வீராங்கனை சோனா சாண்டிலா தங்கம்: மொத்தமாக இந்தியா 8 பதக்கம் வென்றுள்ளது!

click me!