ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா தனது 2 மகள்களின் பெயரை எழுதிய ஷூவுடன் பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, தனது ஷூவில் அனைத்து உயிர்களும் சமம் என்று எழுதியிருந்தார். இந்த ஷூவுடன் விளையாட இருந்தார். இதற்கு ஐசிசி தடை விதித்திருந்தது. இது போன்று எழுதிய ஷூவுடன் விளையாட கூடாது என்று அறிவுறுத்தியிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கவாஜா வீடியோ வெளியிட்டு ஐசிசி மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், தான் தற்போது 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா விளையாடி வரும் நிலையில், கவாஜா தனது ஷுவில் வேறு ஒன்றை எழுதி விளையாடியுள்ளார். அதில் தனது 2 மகள்களின் பெயர்களை எழுதியிருந்தார். அதாவது அய்லா என்றும், ஆயிஷா என்றும் எழுதியிருக்கிறார். இப்படி எழுதினால், ஐசிசி எப்படி தடை விதிக்க முடியும் என்பது போன்று மகள்களின் பெயரை எழுதியிருக்கிறார்.
SA vs IND, KL Rahul: டிசம்பர் 26: கேஎல் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மறக்க முடியாத நாள்!