வலுவான நிலையில் ஆஸ்திரேலியா.. 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்துக்கு கடும் சவால்

By karthikeyan VFirst Published Dec 15, 2019, 10:10 AM IST
Highlights

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. 
 

பெர்த்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்துவரும் இந்த போட்டி, கடந்த 12ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, மார்னஸ் லபுஷேனின் அபாரமான சதம் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் அரைசதம், மற்ற வீரர்களின் பங்களிப்பால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தை சமாளிக்க முடியாமல் வெறும் 166 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை அசத்தினார்.

250 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்துள்ளது. முதல் இன்னிங்ஸ் முடிவில் 250 ரன்கள் முன்னிலை பெற்றதால் முடிந்தவரை இரண்டாவது இன்னிங்ஸில் விரைவில் ஸ்கோர் செய்துவிட்டு நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்யவைக்க வேண்டும் என்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் அடித்து ஆடினர். மார்னஸ் லபுஷேன் மற்றும் ஜோ பர்ன்ஸ் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். வார்னர், ஸ்மித், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன் ஆகியோர் சோபிக்கவில்லை. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் மேத்யூ வேட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர். 

மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 417 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதுவே நியூசிலாந்து அணிக்கு மெகா இலக்குதான். ஆஸ்திரேலிய அணி இன்னும் பேட்டிங் செய்யும் என்பதால் இதைவிட மெகா இலக்கை நிர்ணயிப்பது உறுதி. எனவே கடைசி இன்னிங்ஸில் இவ்வளவு பெரிய இலக்கை, ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை எதிர்கொண்டு அடிப்பதெல்லாம் சாத்தியமே இல்லாத காரியம். ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு அருகில் உள்ளது. நியூசிலாந்து அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏனெனில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் குறிப்பாக நாதன் லயன் ஆகியோரை எதிர்கொண்டு இவ்வளவு பெரிய ஸ்கோரை சாத்தியமில்லை.

click me!