தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று நடந்த 10ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 2ஆவது முறையாக குறைவான ரன்னுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
லக்னோவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையின் 10ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், முதலில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீசியது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணியில் குயீண்டன் டி காக் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு எய்டன் மார்க்ரம் 56 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஜோஸ் ஹசல்வுட், பேட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். அதன் பிறகு கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு முன்வரிசை வீரர்களான மிட்செல் மார்ஷ் 7 ரன்னிலும், டேவிட் வார்னர் 13 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
ஜோஸ் இங்கிலிஸ் 5, கிளென் மேக்ஸ்வெல் 3, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 5 என்று சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த மிட்செல் ஸ்டார்க் 27 ரன்களில் வெளியேற, கடைசி வரை போராடிய மார்னஸ் லபுஷேன் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் பேட் கம்மின்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழக்க, ஜோஸ் ஹசல்வுட் 2 ரன்களில் ஆட்டமிழக்க இறுதியாக ஆஸ்திரேலியா 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, 177 ரன்கள் மட்டுமே எடுத்து 134 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது.
இதன் மூலமாக ஆஸ்திரேலியா 2ஆவது தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக நெட் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தென் ஆப்பிரிக்கா அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் கஜிசோ ரபாடா 3 விக்கெட்டும், கேசவ் மஹாராஜ், மார்கோ ஜான்சென் மற்றும் தப்ரைஸ் ஷாம்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். லுங்கி நிகிடி ஒரு விக்கெட் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானதன் மூலமாக இந்த ஆண்டில் மட்டுமே 2ஆவது முறையாக ஆஸ்திரேலியா குறைவான ரன்னுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
இதற்கு முன்னதாக சென்னையில் நடந்த இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, 2011 பாகிஸ்தானுக்கு எதிராக 176 ரன்களும், 2015 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 151 ரன்களும் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
IND vs AFG: ரன் ரேட்டில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி புள்ளிப்பட்டியில் 2ஆவது இடம் பிடித்த இந்தியா!
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக ஆஸ்திரேலியா 40 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்ச ரன்களுக்கு தோல்வியை தழுவியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இதற்கு முன்னதாக 1983 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக 118 ரன்கள் வித்தியாசத்திலும், அதே ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 101 ரன்கள் வித்தியாசத்திலும், 1979ல் பாகிஸ்தானுக்கு எதிராக 89 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியுள்ளது.