ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பையின் 10ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையின் 10ஆவது லீக் போட்டி தற்போது லக்னோ மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணியில் குயீண்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடர்ந்து சொதப்பி வந்த பவுமா இந்தப் போட்டியிலும் முதலிலேயே ஆட்டமிழந்தார். இதில், அவர் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தமிழக அணியின் முன்னாள் பயிற்சியாளர் கோகுலகிருஷ்ணன் திடீர் மரணம்!
இதையடுத்து, ரஸி வான் டெர் டூசென் களமிறங்கினார். அவர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் நிதானமாக விளையாடிய டி காக் இந்த உலகக் கோப்பையில் 2ஆவது சதம் அடித்தார். மேலும், ஒரு நாள் போட்டிகளில் 19ஆவது சதம் அடித்தார். அதோடு, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக உலகக் கோப்பையில் தொடர்ந்து 3ஆவது வீரராக சதம் அடித்துள்ளார்.
உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சதம்:
101 - ஹெர்ஷல் கிப்ஸ், லீட்ஸ், 1999
100 – பாப் டூப்ளெசிஸ், மான்செஸ்டர், 2019
100* - குயின்டன் டி காக், லக்னோ, 2023*
உலகக் கோப்பைகளில் தென் ஆப்பிரிக்காவுக்கு அதிக சதங்கள்:
4 - ஏபி டி வில்லியர்ஸ்
2 - ஹாசீம் ஆம்லா
2 – பாப் டூப்ளெசிஸ்
2 - ஹெர்ஷல் கிப்ஸ்
2 - குயின்டன் டி காக்
தென் ஆப்பிரிக்காவின் ஓபனிங் வீரராக அதிக ஒருநாள் சதம்:
27 - ஹாஷிம் ஆம்லா
19 - குயின்டன் டி காக்*
18 - ஹெர்ஷல் கிப்ஸ்
13 - கேரி கிர்ஸ்டன்
10 - கிரேம் ஸ்மித்
ஒருநாள் உலகக் கோப்பையில் 100 ரன்களை அடித்த தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர்:
107* - ஏபி டி வில்லியர்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ், டெல்லி, 2011
134 - ஏபி டி வில்லியர்ஸ் vs நெதர்லாந்து, மொஹாலி, 2011
100 - குயின்டன் டி காக் vs இலங்கை, டெல்லி, 2023
109 - குயின்டன் டி காக் vs ஆஸ்திரேலியா, லக்னோ, 2023
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா வீரர்கள் ஒருநாள் சதங்கள்:
5 - ஃபாஃப் டு பிளெசிஸ்
3 - ஹெர்ஷல் கிப்ஸ்
3 - குயின்டன் டி காக்*
உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பராக அதிக ODI சதங்கள்:
5 - குமார் சங்கக்கார
2 - ஏபி டி வில்லியர்ஸ்
2 - பிரெண்டன் டெய்லர்
2 - குயின்டன் டி காக்*
குயிண்டன் டி காக் 109 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த எய்டன் மார்க்ரம் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹென்ரிஸ் கிளாசென் 29 ரன்களில் வெளியேற, டேவிட் மில்லர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்கோ ஜான்சென் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது.
IND vs AFG: ரன் ரேட்டில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி புள்ளிப்பட்டியில் 2ஆவது இடம் பிடித்த இந்தியா!
ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஜோஸ் ஹசல்வுட், பேட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.